தோழர் ஜோ செனிவிரட்ணா மறைவு

(தோழர் ஜேம்ஸ்)

ஐம்பது ஆண்டுகள் இலங்கையின் சமூகபொருளாதார மறுமலர்ச்சிக்கும் ஜனநயாகம் மனித உரிமைகளுக்குமான இடையறாத சளையாத போராட்டக்காரரும் ஊடகவியலாளாரும் வடக்கு கிழக்கு மாகாண அமைச்சரவையில் அங்கத்தவரும் இன சமூகங்களின் ஐக்கியத்திற்கு இடையறாது செயற்பட்டவரும் முற்போக்கு இயக்க பாரம்பரியத்தை சேர்ந்தவரும் தொழிற்சங்கவாதியும் “விகல்பகண்டயம” மாற்று அமைப்பின் முன்னோடிகளில் ஒருவரும் எம்முடன் ஒரு நீண்ட பயணத்தை நடத்தியவருமான தோழர் ஜோ மறைவு.தயான் ஜயத்திலகா இற்கு பின்பு இவர் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் அமைச்சர் ஆக செயற்பட்டார்.

1980 களின் முற் கூற்றில் ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக கூர்மையடைந்திருந்து வேளைகளில் பிரிந்து சென்று தனிநாடு அமைத்தல் என்ற போக்கு மட்டும் முன்னிலை பெற்றிருந்தது இஆனால் ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புகளில் பத்மநாபாவின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வர்க்க புரட்சி பற்றியும் இலங்கை முழுவதிற்குமான புரட்சி என்பது ஈழவிடுதலையின் இரண்டாவது பாகம் என்ற போக்கில் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர் எனவே இதற்கு சிங்களப் பகுதிகளில் ஒரு சமாந்தர அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்தற்கான செற்பாடுகளை முன்னெடுத்திரு;நதன் இதில் ஜோ செனிவரத்தினவின் பங்களிப்பு மகத்தானது சித்தன் டிசில்லா, பியால், புல்சாரா, தயான் ஜெயத்திலக, குமாரி ஜெயவர்த்தன, முத்து, சிறில் போன்றவர்களினால் முன்னிலையில் நின்று உருவாக்கிய ‘விகல்பகண்டயம’ அமைப்பு செயற்பட்டது.

 
இவ் அமைப்பின் செயற்பாடுகளுக்கா தமிழ் பகுதியிற்கு அடிக்கடி வந்து செல்வோரில் ஜோவும் முதன்மை பெற்றிருந்தார் இதனால் இவர் தமிழ் மொழியை நன்று பேசக்கற்றிருந்தார் இவரின் அழகு தமிழ் எம்மையெல்லாம் சிங்களம் என்ற சகோதரத்துவ மொழியை நாம் கற்கத்தவறிவிட்டோமே என்ற செய்தியை சொல்லியும் நிற்கும். கொழும்பு பல்கலைக் கழக சுதந்திர மாணவர் அமைப்பின் தலைவர் தயாபத்திர போன்றவரகளின் கொலையும் இதனைத் தொடர்ந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஜோ செனிவரத்தினவை மட்டும் அல்ல ஏச்என் பெனார்ன்டோ போன்றவர்களையும் யாழ்பாணத்திற்குள் பாதுகாப்பிற்காக தள்ளியது.
 
பின்பு யாழ்பாணத்தில் இலங்கை பாதுகாப்பு படைகளின் கெடுபிடிகள் அதிகரிக இவர்கள் தமிழநாட்டில் ஈழவிடுதலை அமைப்புகளின் அனுசரணையுடன் செயற்படவேண்டியதாயிற்று. கூடவே இவர்களுக்கு புலிகளால் ஏனைய விடுதலை அமைப்புக்களுக்கு ஏற்பட்ட போராடும் உரிமை மறுப்பும் கொலை அச்சுறத்தல்களும் ஏற்பட்டன. இலங்கை இந்திய அமைதி உடன்பாடு ஏற்பட்டபின்பு தொடர்ந்தும் தென்னிலங்கையில் இவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலகள் தொடர்ந்தன். ஆனால் இவரகள் தமது அரசியல் செயற்பாடுகளை வடக்கு கிழக்கு எங்கும் முன்னெடுத்தனர் குறிப்பாக கிழக்கில் வாழும் பெரும்பகுதி சிங்கள மக்களை ஏனை சமூகங்களுடன் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்குரிய அரசியல் தலமையை கொடுப்பதில் ஜோவின் பங்களிப்பு மகத்தானது.
 
2015 ம் ஆண்டு இலங்கை சென்றிருந்த போது யாழ்ப்பாணம் வந்திருந்த தோழர் ஜோவுடன் மிக நீண்ட நேரம் உரையாடி இருந்தேன். தோழமை தின நிகழ்வில் மிக நீண்டதொரு உரையை ஆற்றியிருந்தார். அவருடனும் அவருடன் வந்திருந்த சக தோழர்களுடனும் உணவு அருந்தியது அவர்களின் தேவைகளை கவனித்தது என்று நீண்ட இணைந்த செயற்பாடுகள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில் அமைச்சராக செயற்பட்ட காலங்கள் என்று எமது உரையாடல்கள் நீண்ட சென்றன.
 
தென் இலங்கை சிங்களவர்கள் அதிகம் விரும்பும் பனம் பொருள் உற்பத்திககளை யாழ் சந்தைப் பகுதியிலும் பனம்பொருள் அபிவிருத்தி சபையிலும் வாங்கி கொடுத்ததும் வடபகுதி மக்களின் இந்த உற்பத்திப் பொருட்களின் மீது சிங்கள மக்களுக்கு இருக்கும் ஈடுபாட்டையும் உணர்த்திச் சென்ற அவரினதும் இவரின் குழாத்தினதும் செயற்பாடுகள் பசுமையான மனதில் ஓடி மறைகின்றன. எம்மைப் போன்றவர்களுடன் அளவளாவிய சில தினங்களிலேயே எம்மை தமது பகுதிக்கு அழைத்து மக்களை சந்திக்க வைக்க வேண்டும் என்ற அவரின் சகாக்களின் வேண்டுகோளை இதுவரை நிறைவேற்ற முடியவில்லை என்பது எனக்குள் தவறவிட்டுவிட்டோமோ தோழரை என்று இழப்பினால் ஏங்க வைக்கின்றது.
 
எமது பேச்சுக்கள் செயற்பாடுகளினால் ஈர்க்கப்பட்ட இவரின் சகாக்களுக்கு தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் சகோதரத்துவத்தை விரும்பும் செயற்பாட்டை உடையவர்கள் இதேபோல் சிங்கள் சமூகத்தில் பலரும் உள்ளனர் என்று கூறி அந்த வார்தைகளும் இவர்கள் யாபேரையும் யாழ் புகையிரத நிலையத்தில் தென் இலங்கை நோக்கி அவர்களின் வீட்டிற்கு வழியனுப்பி வைத்ததும் நினைவலைகளில் ஓடுகின்றன. இந்த வழியனுப்பு இறுதிப் பயணத்திற்கான வழியனுப்பாக இருக்கும் என்று நான் நினைத்து இருக்கவில்லை எம்மோடு எல்லாக்காலத்திலும் இணைந்து பயணித்த தோழன் இந்த மரணம் வலிக்கின்றது