பற்குணம்(பதிவு 14)

பற்குணம் வயல்களில் வேலை செய்த காலங்களில் படிக்காத பாமர தொழிலாளர்களே இவர்களது வழிகாட்டிகள். பற்குணமும், தங்கராசாவுமே படித்தவர்கள். அந்த பாமர மக்களின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் இரசித்துக்கொண்டே அவர்களின் சொல் கேட்டு வேலை செய்வார்கள்.(தங்கராசா பின்னாட்களில் கச்சேரியில் தலைமை லிகிதராக பணிபுரிந்தவர்)

ஒரு நாள் வயல் உரிமையாளரின் மகள் படிப்பு சம்பந்தமாக தன் தகப்பனிடம் யாரிடமாவது உதவி வேண்டும் எனக் கேட்டாள்.வயல் வேலைகள் இருந்ததால் அவரால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை .அப்போது அந்த வயலில் வேலை செய்ய வந்த தேவன் என்பவரிடம் மகளின் பிரச்சினை பற்றிக் கூறினார்.தேவனோ வயலில் வேலை செய்யும் உயரமான பெடியன் பற்குணத்தைக் கேளுங்கள் என்றார்.அப்போது அவர் பெடியன் ஜே.சி (j.s.c =gr8) படித்த பெடியனோ எனக் கேட்டார். அவரோ எனக்குத் தெரியாது ஆனால் பெரிய படிப்பு சிங்கள நாட்டில் படிக்கிறான் என்றார்.

குழம்பிய நிலையில் வயல்காரர் வேறு ஒருவரை தேடி மகளிடம் கொண்டு வந்தார்.அவர் அவருடைய மகளுக்கு படிப்புனைந்து விளங்கப்படுத்திவிட்டு அண்ணன் பற்குணத்தோடு உரையாடினார்.அப்போதே அவர் பல்கலைக்கழக மாணவன் என தெரிந்தது .

வயல்காரரோ தம்பி நீ ஏன் இங்கே வந்தாய்.நீ வேலை செய்யாதே .நான் சம்பளம் தருகிறேன் என சொல்லி பற்குணத்தை வயலில் இறங்க விடவில்லை.மிக கௌரவம் கொடுத்தார்.இதை விரும்பாத பற்குணம் தங்கராசாவிடம் மட்டுமே சொல்லிவிட்டு ஊர் திரும்பினார்.

பற்குணம் பல்கலைக் கழகம் சென்றபின் கம்யூனிஸ்ட் கொள்கையில் ஈடுபாடு கொண்டார.இதன் காரணமாக தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்குகொண்டார்.நேரடியான பங்களிப்பை போராளி இரத்தினம் தடுத்தார்.கண்டித்தார்.இதனை அம்மா அய்யாவும் படிப்பு காரணமாக விரும்பவில்லை.இவரின் உயிருக்கு அந்த நாட்களில் அச்சுறுத்தல்கள் இருந்தன.இதன் காரணமாக அந்த வறுமையிலும் இவரை காரில் ஏற்றி இறக்கியே பல்கலைக்கழகம் அனுப்ப வேண்டியிருந்தது.ஆனால் அவர் அஞ்சவில்லை.

மட்டுவில் மகாவித்தியாலயத்தில் நடந்த சரஸ்வதி பூசைப் போராட்டத்தில் தன் ஆசிரியர்களுடனேயே வாக்குவாதப்பட்டார்.பற்குணம் தவறு யார் விட்டாலும் தட்டிக் கேட்க தயங்கியதில்லை.

பற்குணம் பல்கலைக்கழகம் சென்றபின் புதிதாக தெரிவான பல வறிய குடும்ப மாணவர்களை அழைத்துச் சென்று சகல ஒழுங்குகளையும் செய்து கொடுப்பார்.இதனால் இவரின் நட்பு வட்டம் மேலும் விரிவடைந்தது.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)