ஒன்பது ஈழத் தமிழர்களை நாடுகடத்திய சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்த மேற்குறித்த ஒன்பது இலங்கையரை அந்த நாட்டு அரசு நாடுகடத்தியுள்ளது. இன்று (புதன்கிழமை) 1.5 என்ற விஷேட விமானம் மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். ஒன்பது பேரும் வடக்கை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் 6 மாதங்கள் தொடக்கம் இரண்டு வருடங்கள் வரை சுவிட்சர்லாந்தில் வசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இலங்கையர்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்தே இவர்கள் நாடுகடத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

சிவகுமார் சிந்துஜன் -கிளிநொச்சி

தம்பிராஜா நிரோசன் – யாழ்ப்பாணம்

ரஜீவன் – புங்குடுதீவு

லிந்துதாஸ் – இணுவில்

பாலசுதன் யாழ்ப்பாணம்

காண்டீபன் பருத்தித்துறை

சிவநேசன் பருத்தித்துறை

குறித்த 9 பேரும் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளவர்கள் எனவும் இவர்கள் அந்தநாட்டு சட்டதிட்டத்தை மீறி குடியேறிய நிலையில் இவர்கள் நாட்டை விட்டு திருப்பி நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்கள் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 1.05 மணி விசேட விமான மூலம் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்களை விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர் என கட்டநாயக்க பொலிசார் தெரிவித்தனர்