மேஜர் எழிலன்

சின்னத்துரை சசிதரன் என்கிற எழிலனின் பல கொடுமையான நடவடிக்கைகளுள் மோசமான மூன்று முக்கியமான சம்பவங்கள், ஒரு நெருக்கடியான நிலமையில் ஒருவர் இறங்கக் கூடிய சீரழிவின் ஆழத்தை விளக்குவதற்கான உதாரணமாக உள்ளன. முதலாவது சம்பவம் புதுமாத்தளனில் நடைபெற்றது. காயம் பட்டவர்களை ஏற்றிச் செல்வதற்காக ஒரு ஐசிஆர்சி கப்பல் அங்கு நிறுத்தப்பட்டபோது வழக்கம் போல காயம் பட்டவர்களினது ஆபத்தான நிலைக்கு முன்னுரிமை வழங்குவதற்குப் பதிலாக எல்.ரீ.ரீ.ஈ, தனது காயம்பட்ட அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள்,புலி அங்கத்தினரது குடும்ப அங்கத்தவர்கள் ஆகியவர்களுக்கு முதலில் செல்வதற்கு அனுமதி வழங்கியது.

இதனால் காயம்பட்ட பொதுமக்களின் உறவினர்கள் தங்கள் காயம்பட்ட குடும்ப அங்கத்தவர்களின் நிலமையை ஐசிஆர்சி அதிகாரிகளிடம் காட்டி அவர்களை சிகிச்சைக்காக கடல்மூலம் எடுத்துச் செல்வதற்கு முன்னுரிமையை பெற்றுக் கொள்வதற்காக வெறி பிடித்தவர்களைப் போல நடக்க முயன்றனர்.
இது எல்.ரீ.ரீ.ஈக்கு சினத்தை மூட்டியது. துப்பாக்கிகளால் சுட்டால் ஐசிஆர்சி அதிகாரிகள் எச்சரிக்கை அடையலாம் எனக்கருதி, அதற்குப் பதிலாக புலிகள். வாள்கள் .கத்திகள். மற்றும் பொல்லுகளைப் பயன்படுத்தி பொதுமக்களை தாக்கவும் அடிக்கவும் செய்து. ஐசிஆர்சி நபர்களை அவர்கள் சந்திப்பதை தடுத்தார்கள். எழிலன் தானே ஒரு வாளை ஏந்தியபடி ஆதரவற்ற மக்கள்மீது மிகவும் ஆர்வத்துடன் அதை வீசியபடி நிற்பதை காணக்கூடியதாக இருந்ததாம். மாத்தளன் மக்களின் கிளர்ச்சி ஐசிஆர்சி கப்பல் போன பின்பும் தொடர்ந்தது. இப்போது எல்.ரீ.ரீ.ஈ கிளர்ச்சியை அடக்குவதற்காக பொதுமக்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஏழு பேராவது உயிரிழந்ததுடன் பதினைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தார்கள்.எழிலனின் கட்டளையின் பேரில்தான் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது சம்பவம் வலைஞர்மடத்திலுள்ள செபமாலை மாதா கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்றது. ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கலாக சுமார் 900 க்கும் மேற்பட்டவர்கள் இந்த தேவாலயத்தில் தஞ்சம் அடைந்தபோது, அங்குள்ள கத்தோலிக்க குருமாரும் மற்றும் கன்னியாஸ்திரிகளும் அவர்களுக்கு கஞ்சி வழங்கி பாதுகாத்து வந்தார்கள். அந்த தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தவர்கள், தங்குவதற்கு எந்த ஒரு இல்லிடம் இல்லாதவர்களும் மற்றும் புலிகளினால் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்பட்டு அதிலிருந்து தப்பி ஓடிய அங்கத்தவர்கள் மற்றும் புலிகளின் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு ஆபத்தை எதிர்நோக்கும் பிள்ளைகள் உள்ள குடும்பத்தினர்களும் ஆவார்கள்.
புலிகளின் திருமூர்த்திகளான எழிலன், இளம்பரிதி, மற்றும் மலைமகள் ஆகியோர் இந்தப் பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்து,அந்த மக்களை திருப்பி அனுப்பவேண்டும் அல்லது எல்.ரீ.ரீ.ஈ அந்த வளாகத்துக்குள் சென்று அபயம் தேடியுள்ளவர்களை பரிசீலிக்க அனுமதிக்க வேண்டும் என்று கத்தோலிக்க குருமார்களிடம் கோரி வந்தார்கள். அந்த மக்கள் தேவாலயத்தில் அடைக்கலம் கோரியுள்ளவர்கள் எனக்கூறி அவர்களை உள்ளே அனுமதிக்க மறுப்பதில் கத்தோலிக்க குருமார்கள் உறுதியாக நின்றார்கள். தொடர்ச்சியான முயற்சிகளின் பின்னர் பொறுமை இழந்த எழிலன் தேவாலயத்தை சுத்தமாக்க ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்தார். ஆயுதம் தாங்கிய எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் ஒரு இராணுவத் தாக்குதலுக்கான ஆயத்தங்களைப் போல தேவாலயத்தை சுற்றி அணிவகுத்து நின்றார்கள். எல்.ரீ.ரீ.ஈயினால் தடை செய்யப்பட்ட தமிழ் குழுக்களின் அங்கத்தவர்கள் தேவாலயத்தில் இருக்கிறார்கள் அவர்களை களையெடுக்க வேண்டும் என்று கத்தோலிக்க குருமார்களிடம் எழிலன் தெரிவித்தார்.
பின்னர் எழிலன் தலைமையிலான எல்.ரீ.ரீ.ஈயினர் தேவாலய வளாகத்துள் சென்று பதின்ம வயதில் இருந்த இளைஞர்களையும் மற்றும் சிறுவர்களையும் இழுத்துச் செல்ல ஆரம்பித்தார்கள். ஆண் மற்றும் பெண் ஆகிய இரு தரப்பையும் சேர்ந்த 500க்கு மேற்பட்ட இளைஞர்கள் சிறுவர்கள் மற்றும் திடகாத்திரமான ஆண்கள் ஆகியோர் துப்பாக்கி முனையில் நடத்திச் செல்லப்பட்டு புலிகள் கொண்டுவந்திருந்த பேரூந்துகளில் ஏறும்படி கட்டாயப் படுத்தப் பட்டார்கள். அவர்கள் யுத்த முனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். சுமார் 300 வரையான வயதான ஆண்களும் மற்றும் பெண்களும் மட்டுமே தங்கள் பிரியப்பட்டவர்களை இழந்த சோகத்தோடு அழுது புலம்பியபடி வலைஞர்மடத்தில் எஞ்சியிருந்தார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை எழிலன் அந்த இடத்தில் தங்கியிருந்து நடப்பனவற்றை மேற்பார்வை செய்தபடி இந்தச் செயற்பாட்டை மேற்கொண்டிருந்தார்.

(Rahu Rahu Kathiravelu)