தோழர் க.பத்மநாபா

ஈழதேச விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை காலமும் எந்த அமைப்பும் தனது காங்கிரசை நடத்தியதில்லை. எமது முன்னணி மட்டுமே தனது காங்கிரசை நடத்தியுள்ள தானது ஈழ மக்களுக்கு ஏற்றதோர் தலைமை உருவாகியுள்ளதைத் தெளிவாக்கியுள்ளது.

முதலாவது காங்கிரசில் தோழர் க.பத்மநாபா அவர்கள் ஆற்றிய தலைமை உரை ஈழப்புரட்சி யில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் காத்திரமிக்க, பிரகாசமான கடந்தகாலச் செயற்பாடுகளையும், எதிர்காலத்தில் நாம் பீடு நடைபோடவுள்ள புரட்சிகர திசைவழியையும் தெளிவாக்குகிறது. மார்க்சிச லெனினிச
சிந்தனையாளரான தோழர் நாபாவின் தலைமை உரை எமது தோழர்களாலும், மக்களாலும் படித்தறிய வேண்டிய ஒன்றாகும்.

வரலாற்றுக் கடமை

ஈழ மக்களின் விடுதலை என்னும் பாரிய கடமையைத் தாங்கித் துன்பங்களும், துயரங்களும் நிறைந்த காட்டு ஆறுகளைத் தாண்டி வீறு நடை போட்டுக் கொண்டிருக்கும் என் அருமைத் தோழர்களே! உங்கள் அனைவருக்கும் ஈழ மக்களின் புரட்சி கர வணக்கத்தை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

பல்வேறு சிக்கல்கள், சிரமங்களின் மத்தியில் நடை பெறுகின்ற வரலாற்றுப் பெருமைமிக்க எமது முன்னணியின் முதலாவது காங்கிரசில் உங்கள் முன் உரையாற்றுவதில் பெருமை அடைகிறேன். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பிய பாட்டாளிவர்க்கம் ஆரம்பித்து வைத்த புரட்சியின் பாதையில் இன்று நாம் எமது தேச மக்களின் விடுதலையைக் குறித்துத் துணிவோடு நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஸ்தாபனத்தின் முன்னணி
உறுப்பினர்கள் எமது எதிர்காலத் திட்டம் குறித்து ஆராய இங்கு ஒன்று கூடி இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன்.

இன்று எமது மக்கள் இரவு வாழ்க்கையையும் இழந்து நிற்கிறார்கள்; குடும்ப உறவுகள் சிதைக்கப் பட்டிருக்கிறார்கள்; அன்றாட வாழ்வைப் பறி கொடுத்து நிற்கிறார்கள். எமது இளைஞர்கள் நாளந்தம் கொலை செய்யப்பட்டு அனாதரவாக வீதி களில் கிடக்கிறார்கள்.

6

ஈழத்து நிலங்கள் எரிக்கப்பட்ட தமிழர்களினால் ஜோடிக்கப்படுகின்றன. சிறீலங்கா வெறியர்களுக்கு ஆதரவாக அமெரிக்க ஏகாதிபத்திய நாய்களும்
இன வெறி பிடித்த இஸ்ரேலியக் கொலைஞர்களும் கைகோர்த்து நிற்கிறார்கள்.

இதே வேளையில் உலகின் பாட்டாளி வர்க்க முற்போக்கு, ஜனநாயக, தேசீய விடுதலைப் போராட்டச் சக்திகள் எமதுபோராட்டத்தை, எமது முன்னணியை பொருளால் ஆதரித்து நிற்காதுவிடினும் உள்ளத்தால் ஒன்றுபட்ட குரலால் எமது உறுதி குலையாத
நெஞ்சங்களுக்குத் துணைநிற்கிறார்கள். வரலாற்றில் எமது எதிரிகளா அல்லது நாமும் நமது நண்பர்களுமா பலம் வாய்ந்தவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் என்பதை ஈழ விடுதலைப் போராட்டத்தில் நிரூபிக்க வேண்டிய கடமை நமக்குரியது. இவற்றை உணர்ந்து பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஈழ மக்களை ஒன்று திரட்டி உறுதியோடும் திறமையோடும் போராடி நமது வரலாற்றுக் கடமையை முடிக்க- வேண்டியது எமது பொறுப்பாகும்.

அன்பார்ந்த தோழர்களே!

எமது போராட்டத்திற்குச் சர்வதேச ரீதியாகக் கிடைத்துள்ள ஆதரவை நாம் சரியான நேரத்தில், சரியான முறையில் எமது எதிரிகளைத் தோற்கடிப் பதற்காகப் பிரயோகிக்க வேண்டும். எம் மக்களோடு வரலாற்றாலும் இனத்தாலும் மொழியாலும் சமூக கலாச்சார உறவாலும் ஒன்றுபட்ட தமிழக மக்கள் எமது போராட்டத்திற்குத் தோளோடு தோள் தந்து கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேசஇயக்கங்கள் பல எமதுபோராட்டத்தை ஆதரித்து நிற்பதோடு மட்டுமல்லாது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும் தமக்கு நட்புச் சக்தியாக

7

ஏற்றுக்கொண்டிருப்பதையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். எம்மை ஆதரிக்கும் உலக நாடுகள் வெறும் பேச்சளவில் தானே ஆதரிக்கின்றன அதனால் எங்களுக்கு என்ன பலன் என்று நீங்கள் ஆதங்கம் கொண்டிருக்கலாம். ஆனால் சர்வதேச மக்களின் உளப்பூர்வமான ஆதரவும் எமது எதிரிக்கு எதிராக அவர்களிடம் ஓங்கி நிற்கும் குரலும் எமக்குத் துணையாக நிற்கும் மாபெரும் சக்தி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இதே போல எமது போராட்டத்தில் உலக நாடுகள் ஆதரவு தரவேண்டும் என்று எதிர்பார்க்கின்ற நாம் மறுபுறம் உலக மெங்கும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற பல்வேறு நாடுகளினதும், தேசீய இனங்களினதும் விடுதலைப்
போராட்டங்களுக்குப் பொருள் ரீதியாக முடியாவிட்டாலும் உளரீதியாக எப்போதும் கைகோர்த்து நிற்க வேண்டும் என்பது எமது பிரதான கடமையாகும்.

1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோற்றம் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் அன்று தான் நாம் திடீரென்று இந்தப் போராட்டக் களத்தில் குதித்தோம் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணி யின் வரலாற்றிற்கும் ஒரு முன் தொடர்ச்சி உண்டு. தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை,
*தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஈழப் புரட்சியாளர்கள் என்ற வரலாற்று ஓட்டத்தின் ஒரு கட்டம்தான் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணி.

  • இங்கே குறிப்பிடப்படுவது தற்போதுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தையன்று.

8

எமது முன்ணணியை நாம் தோற்றுவித்து அதனை நாம் பிரகடனம் செய்தபோது எம்மைக் கிண்டல் செய்தவர்கள் பலபேர், எம்மை ஒதுக்கி விட்டவர்கள் ஏராளம் பேர்,
சில சின்னப் பையன்கள் சேர்ந்திருக்கிறார்கள், இவர்கள் என்ன வரலாற்றைச் சாதித்து விடுவார்கள் என்று ஏளனம் செய்தவர்கள் நூற்றுக்கணக்கானோர். எமக்கு உதவி செய்வதாகக் கூறி மறுத்து விட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களை எல்லாம் இன்று திரும்பிப் பார்க்கிறேன். ஆனால் ஆத்திரம் கொண்டல்ல; ஏளனக் கண்ணூடாக அல்ல; கிண்டல் செய்வதற்காகவும் அல்ல, அவர்கள் வரலாற்றைப் புரிந்துகொண்டது
அவ்வளவுதான் என்று.

பணம் சிறிதும் இல்லாமல் பக்க உதவிப் பலம் எதுவும் இல்லாமல் தோளோடு தோள் சேர்த்து நின்ற தோழர்களோடு நானும் சேர்ந்து எமது முன்னணியைத் தோற்றுவித்தோம்.
பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறோம்;
பல காத தூரங்களை நடந்தே கடந்திருக்கின்றோம். நாம் இன்னும் கற்கவேண்டும் தான். அதை நான் மறுக்கவில்லை. பணமே இல்லாத வர்கள்தான்; அதையும் நான் மறுக்கவில்லை. பக்க பலம் எதுவும் இல்லாதவர்கள் என்பதும் உண்மை தான், ஆனால் எமது நெஞ்சில் உரமுண்டு; நேர்மையான நடையும் தோழர்களோடு தோள் சேர்க்கும் துணையும் உண்டு, வரலாறு பற்றியதோர் தெளிவான பார்வை எம்மிடம் உண்டு. மார்க்சிச,
லெனினிச சித்தாந்தத்தின் மீது சந்தேகமற்ற நம்பிக்கை உடையவர்கள் நாங்கள். இவைதான் எமது ஏணியின் படிக்கட்டுகளாக இருந்து வந்தன.

துன்பங்களையும் துயரங்களையும் ஏக்கங்களை யும் ஏமாற்றங்களையும் அஞ்சாது மனம் துஞ்சாது ஏற்று வீறுநடை போட்டு வந்த எமது தோழர்களின் பங்களிப்பு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யின்

9

வரலாற்று வளர்ச்சியில் மகத்தானதாகும். குட்டி முதலாளித்துவச் சிந்தனைகள் பலமாக வேர் ஊன்றி இருக்கும் எமது சமுதாயத்தில் ஆயுதம் தாங்கி நாடகம் ஆடும் சாகச வீரர்களை ரசித்து நிற்கும் மக்கள் கூட்டத்தின் மத்தியில் சிறியவர்களாகவும் எண்ணிக் கையில் குறைந்தவர்களாகவும் ஆயுதம், பணம், பக்க உதவிகள் சிறிதும் அற்றவர்களாகவும், நடைபோட ஆரம்பித்த நாம் இன்று மக்கள் மத்தியில் மாபெரும் சக்தி என்பதைச் சர்வதேச அரங்கில் நிலைநாட்டி யிருக்கிறோம்.

எம்மோடு ஐக்கிய முன்னணியை உருவாக்கவேண்டும் என்ற ஆர்வத்தை ஏனைய இயக்கத்தவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறோம். ஈழ மக்களுக்கு ஏற்ற தலைமை ஒன்று உருவாகி வருகிறது என்ற உண் மையை நிருபித்துக் காட்டி இருக்கிறோம். எமது மூல உபாயங்களும், எமது தந்திர உபாயங்களும் எவ்வளவு தூரம் அரசியல் தீர்க்கதரிசனமானவை என்பதனை எமது போராட்ட வரலாற்றின் நடைபாதை யில் நிஜமாக்கிக் காட்டியிருக்கிறோம். இவை யாவற்றுக்கும் எமக்கு மூலபலமாக விளங்கியது யார்? என்ன? எவை? அது எமது மக்கள்தான். மக்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டோம். மக்கள் போதிப் பதற்கு ஆசிரியராக இருந்த போதெல்லாம் நாம் மாணவர்களாகவும் இருந்துகொண்டோம். மக்களிலேயே நாம் தங்கியிருக்க வேண்டும் என்பதை நமக்கு நாமே கட்டாயமான கட்டளை ஆக்கிக் கொண்டோம்.

அனைத்து உழைக்கும் மக்களினதும் நலன்களுக்கு வழிகாட்டும் மார்க்சிச லெனினிசச் சித்தாந்தத்தை அதன் அடிப்படைத் தத்துவமான வரலாற்று இயங்கியல் பொருள்முதல்வாதத்தை எமக்குப் பார்வையைத் தரும் தத்துவமாகவும் எமக்கு வழிகாட்டும் சித்தாந்த மாகவும் ஏற்றுக்கொண்டோம்.

10

நாம் மார்க்சிச லெனினிசச் சொற்றொடர்களை மக்களை வஞ்சிப்ப தற்காகவோ மக்களைத் திசை திருப்புவதற்காகவோ எந்த வேளையிலும் பிரயோகித்தது இல்லை. மாக்சிச லெனினிசச் சித்தாந்தத்தின் உண்மையான விசுவாசி களாக இருந்திருக்கிறோம்; இப்போதும் இருக்கிறோம். இனி எப்போதும் அப்படியே இருப்போம் என்று உறுதியாக நம்புகிறோம்.

ஆனால் மார்க்சிச, லெனினிச விசுவாசிகள் என்பதற்காக அதன் படைப்பாளிகளையோ அச்சித்தாந்தத்தையோ நாம் குருட்டுத்தனமாகவோ வரட்டுத் தனமாகவோ, ஏற்றுக்கொண்டதுமில்லை;
ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை. எமது மக்களினதும் எமது மண்ணினதும் கடந்த கால வரலாற்றை முறை யாகவும் சரியாகவும் பார்ப்பதற்கு-விளங்கிக்கொள்வதற்கு அதுவே எமக்கு உதவியாக இருந்திருக்கின்றது. மார்க்சிசச் லெனினிச சித்தாந்தத்தை நாம் கற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்களே எமது மக்கள்தான்.

1970 இன் ஆரம்ப காலங்களில் நாம் வெறும் தமிழின உணர்ச்சி உடையவர்களாகத்தான் இருந்தோம். எம் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கு முறைகள் இன ஒடுக்குமுறை வடிவில இருந்தமையினால் அவ்வாறு அக்காலத்தில் வெறும் இனவுணர்ச் சியாளர்களாக இருந்ததில் தவறேதும் இல்லை. காலப் போக்கில் மக்கள் மத்தியில் நாம் அரசியல் வேலைகளில் தீவிரமாக ஈடுபாடு கொண்டபோது தான் மார்க்சிச லெனினிசத்தை அறிந்துகொண்டோம். தொடர்ந்து அதைக் கற்றுக்கொண்டோம். அதன் அவசியத்தையும் உணர்ந்துகொண்டோம். அதைச்சரியாகப் புரிந்தும் கொண்டோம்.

தொடக்கக் காலங்களில் எமது சிந்தனைகள், நடைமுறைகள் மார்க்சிச லெனினிச ரீதியில் பலதவறு களைக் கொண்டதாக இருந்தன என்பது உண்மை தான்;

11

ஆனால் விமர்சனம், சுய விமர்சனம் என் பவற்றின் ஊடாக எம்மை நாமே திருத்திக்கொண்டோம். அதன்மூலமே நாம் எமது முன்னணியை இன்று இந்த அளவிற்கு வளர்த்தெடுக்க முடிந்துள்ளது. ஈழ விடுதலைப் போராட்ட ஓட்டத்தில் எத்தனையோ
தனி நபர்கள் தனியாகவும் பொதுவாகவும் இயக்கமாகவும் ஈடுபட்டார்கள்;
பங்களித்தார்கள். சிலர் இப் போராட்டத்தையே விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். ஒதுங்கிக்கொண்ட சிலர் மீண்டும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டார்கள். ஒரு போராட்ட வரலாற்றில் தனி நபர்கள் வருவார் கள்; போவார்கள். ஆனால் அந்தக் கால வரலாறு நின்று விடுவதில்லை. சில குழுக்கள், சில இயக்கங்கள் தோன்றும்; மறையும். ஆனால் வரலாற்று ஓட்டம் தடைபட்டு விடுவதில்லை.

வரலாறு எப்போதும் முன்னோக்கியே சென்று கொண்டிருக்கும். வரலாற்றுச் சக்கரங்கள் உலக இயக்கத்தை முன்னோக்கியே நகர்த்திச் செல்லும். எவ்வா றாயினும் நமது போராட்ட வரலாற்றில் பங்களிப்புச் செய்த எந்தவொரு தனி நபரையும் எந்தவொரு குழுவையும் எந்தவொரு இயக்கத்தையும் மதிப்பது எமது பிரதான கடமையாகும். அது யாராகவும் இருக்கலாம். எந்தக் குழுவாகவும் இருக் கலாம். எந்த இயக்கமாகவும் இருக்கலாம். தவறு விடுவதும் தவறு செய்வதும் துன்பங்கள் துயரங் களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒதுங்கி ஓடிவிடுவதும் பொதுவாக மனிதனுக்கு இயல்பே. துன்பங் களையும் துயரங்களையும் சிக்கல்களையும் திறமை யாக எதிர்நோக்கித் தீரமாகப் போராடி, விடாது தொடர்பவர்கள் வரலாற்றில்-இந்த மனித சமுதாயத் தில் சில நபர்களே. அவர்களே வரலாற்றின் கதா நாயகர்களாகிறார்கள்.

12

பேரன்புமிக்க தோழர்களே!

நாம் இந்த வேளையில் எமது முன்னணியின் கடந்த கால வரலாற்றை மதிப்பிட்டும் எம்மைச் சூழ்ந்துள்ள புற நிலைமைகளைச் சரியாகக் கணிப் பிட்டும் எதிர்காலத்திற்கான எமது மக்களின் விடு தலைக்கான கொள்கைகளை வகுப்பதற்கும் திட்டங் களைத் தீட்டுவதற்கும் இங்கு கூடியிருக்கி றோம். இந்த வேளையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றும் நான் எதிர்காலக் கொள்கைகளை வகுக்கும்போதும் திட்டங்களைத் கவனித்துக்கொள்ள வேண்டிய சில அடிப்படையான விடயங்களை உங்கள் முன்பு சமர்ப்பிக்க விரும்பு கிறேன். தீட்டும்போதும்

முதலாவதாக எமது முன்னணியினுள் அமைப்பு ரீதியான கொள்கைகள்பற்றிய, திட்டங்கள்பற்றிய, தனி நபர்களின் நடத்தைகள்பற்றிய சந்தேகங்களும் வெவ்வேறுபட்ட அனுபவங்களும் இதனால் கருத்து முரண்பாடுகளும் உங்கள் மத்தியில் நிலவும். அவற்றை நாம் விமர்சனம், சுயவிமர்சனம், கருத்துப் பரிமாற்றம், விட்டுக் கொடுத்தல், பெரும்பான்மை யினரின் முடிவை எல்லோருமாக ஏற்றல் என்பதன் அடிப்படையில் ஒருமுகப்படுத்த வேண்டியதும், எதிர் காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியதும் எல்லோரின் முன்னாலும் உள்ள கடமையாகும்.

முன்னணியின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு தோழரும் பல்வேறு கடமைகளைப் பகிர்ந்து ஏற்றுக் கொண்டு செயற்பட்டு வந்திருக்கிறோம். நமது முன்னணி அடிப்படையிலிருந்தே ஒரு தலைமறைவு இயக்கமாகச் செயற்பட்டு வந்திருக்கிறது. இதனால் ஒரு தோழரின் வேலை – நடைமுறைக்கும் இன்னொரு தோழரின் வேலை – நடைமுறைக்கும் இடையில்

13

அறியப்படாத நிலைமைகளும், இடைவெளிகளும், வேறுபடுத்தப்பட்ட ஒருங்கிணைப்புகளும் ஏற்படுத் தப்பட்டிருந்திருக்கின்றன. இது எமது இயக்கத்திற்கு அவசியமானதாகவும் இருந்து வந்திருக்கின்றது.

மேற்கண்டவாறான நடைமுறைகளினால் ஒரு குறிப்பிட்ட வேலையில் ஈடுபட்ட தோழரை இன்னு மொரு குறிப்பிட்ட வேலையில் ஈடுபட்ட தோழரோ ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வேலை செய்த தோழர்களை இன்னுமொரு குறிப்பிட்ட பிரதே சத்தில் வேலை செய்த தோழர்களோ முழுமையாக அறிந்துகொள்ளுவதும் புரிந்துகொள்ளுவதும் முடி யாததாக இருந்திருக்கலாம். இவ்வாறான நடை முறை எமது இயக்கத்திற்கு அவசியமானதாக இருக்கின்ற அதே வேளையில் பாதகமான ஒரு அம்சமுமாக அது இருந்து வந்ததை நான் அவதானிக்கிறேன்.

அது என்னவெனில் ஒரு குறிப்பிட்ட வேலையில் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேச வேலைகளில் வேலை செய்த தோழர் அல்லது தோழர்கள் தாம் மட்டுமே கடுமையாக உழைப்பதாகவும் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அவ்வாறு உழைக் காததுபோலவும் கருதும் நிலை பொதுவாக ஏற்பட் டுள்ளது. ஆனால் சிற்சில தவறுகள் இருப்பினும்கூட முன்னணியின் தொடக்க நாளிலிருந்து எல்லாத் தோழர்களும் தத்தம் கடமையை நிறைவேற்ற உழைத்து வந்திருக்கின்றனர் என்பதை எல்லோரை யும் மையப்படுத்தியிருக்கும் நான் இங்குக் கூற வேண்டியவனாக இருக்கிறேன்.

எமது முன்னணியின் வேலைப் பகுப்புமுறைகளை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால் ஒவ்வொரு தோழரும் மற்ற தோழர்கள்மீது நம்பிக்கை உடை யவர்களாக இருந்தால் இவ்வாறான சந்தேகங்கள்

14

எழுவதையோ காலவோட்டத்தில் வளர்ச்சி அடை வதையோ நாம் தவிர்த்துக்கொள்ளலாம். அதையும் மீறித் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுவோம்; விமர்சிப்போம்; திருத்துவோம்; திருந்திக்கொள் வோம்.

இதைவிட மற்றுமொரு முக்கிய பிரச்சினை என்னவெனில் ஸ்தாபனத்தில் உள்ள ஒவ்வொருவரும் அனைத்து விடயத்தையும் எந்தவொரு சிறு வேறு பாடும் இன்றி ஒரேமாதிரியாக அணுக வேண்டும் என்று நினைப்பது. அது எமது இலட்சியமாக இருக்கலாம்; ஆனால் நடைமுறையில் அடிப்படைத் தன்மையைத் தவிர மேலதிகமாகச் சொற்கள், வாக்கியங்கள், வெளிப்படுத்தப்படும் ஓசைகள், நடைகள் என்பன ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது சாத்தியமாகாத விடய மாகும்.

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இடையிலும் சிந்தனை, நடைமுறை என்பவற்றில் வேறுபாடுகள் இருப்பது இயல்புதான். அவற்றினுள் முரண்படாத வற்றை இனம்கண்டு ஒருங்கிணைத்துக் கொள்வது தான் நமக்குச் சாத்தியமானதாகும். தோழர் களுக்கு இடையில் தவறான புரிதல் ஏற்படுகின்ற பொழுது அவை தீர்க்கமுடியாத முரண்பாடுகளா என்பதை நாம் இனம்கண்டு கொள்வது அவசிய மாகும். வேறுபாடுகள் நமக்குள் இருப்பது இயல் பானது. முரண்பாடுகள் இல்லையாயின் வேறுபாடு களை நாம் சுலபமாக முரண்படுத்தாமல் களைந்து கொள்ள முற்படவேண்டும்.

வர்க்கக் கண்ணோட்டம் இன்றித் தனிப்பட்ட நபர் ரீதியான அணுகுமுறையை நாம் கொள்வோ மாயின் நாம் குட்டி முதலாளித்துவச் சிந்தனை உடையவர்களாக இருக்கமுடியுமே தவிர மார்க்சிஸ்ட்

15

லெனினிஸ்டுகளாக இருக்கமுடியாது. நாம் உண்மை யான மார்க்சிஸ்ட், லெனினிஸ்டுகளானால் அதனை நமது சிந்தனை, நடைமுறைகள் ஒவ்வொன்றிலும் நிரூபித்தாக வேண்டும். இதற்காகத் தனி நபர் பிரச்சினைகள் ஓர் இயக்கத்துக்குள் எழ முடியா தென்றோ எழக்கூடாதென்றோ நான் வரட்டுத் தனமாகக் குறிப்பிடவில்லை. ஆனால் தனிநபர் விடயங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பத னையே இங்குப் பிரதானமாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மேலும் நமது முன்னணியின் அமைப்புக் கொள்கைகளில், அரசியல் திட்டங்களில், வேலை நடைமுறைகளில் பல குறைபாடுகள் இருக்கலாம்; இருக்கின்றன. அவை ஒவ்வொன்றினையும் நாம் எல்லோரும் இணைந்து கலந்துரையாடித் தீர்மானங் களை எடுப்பது அவசியமாகும். நமது குறைந்த அறிவு, குறைந்தகால அனுபவம் பல தவறுகளை நம்மில் ஏற்படுத்தி இருக்கும். அவற்றைக் கருத்துப் பரிமா றல்கள் மூலம் தீர்த்துக்கொள்வோம். ஒருவர் சொல்வதை மற்றவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏதுமில்லை. மற்ற வர்கள் •அதாவது ஒவ்வொருவரும் விவாதிக்க உள்ளவான விடயங்களிலும் தமது கருத்துகளையும், விளக்கங்களையும் கூறி இயன்ற அளவிற்குச் சரியான தீர்மானங்கள் எடுக்கப்படுவதற்கு வழி வகுக்கப்பட வேண்டும் என்று எனது அன்பார்ந்த தோழர்கள் ஒவ்வொருவரையும் நான் வேண்டுகிறேன்.

நமது முன்னணி நிதிப் பற்றாக்குறையின் காரண மாகப் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. இதனால் நமது ஆயுதக் கொள்வனவுகள் தடைபட் டுப்போய் நிற்கின்றன. இதனால் நமது முன்னணி மேலும் வலுவுடன் வளர்ச்சி அடைவதில் சில சிக்கல் களை எதிர்நோக்கவேண்டி நேரிடுகின்றது.

16

அது மட்டுமல்லாது முதலாளித்துவ வர்க்கத் தலைமையான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழ் மக்களின் அரசியல் தலைமையை இழந்து நிற் கும் இந்த வேளையில் ஈழத்தில் தொழிலாளி, விவசா யிகளின் முற்போக்குப் புத்திஜீவிகளின் தலைமைஸ்தா பனமாக விளங்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழ விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி ஈழ மக்களை வழி நடத்த வேண்டிய வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டியது எம் அனைவரினது பொறுப்புமாகும்.

எமது போரட்டத்தில் பிரபலம் பெற்று விளங்கு கின்ற குட்டி முதலாளித்துவ இயக்கங்கள் – குழுக்கள் எக்காரணமாயினும் ஈழப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கவோ ஈழ மக்களை வழி நடத்தவோ முடியாதனவாகும். இது அந்த வர்க்கங்களின் குணா திசயமாகும். எம் முன்னால் உள்ள இந்த வரலாற்றுக் கடமையை நாம் நிறைவேற்ற வேண்டுமாயின் எம் முன்னணியை அமைப்பு ரீதியிலும், உறுப்பினர் ரீதி யிலும், நிதி ரீதியிலும், ஆயுத ரீதியிலும், பலப் படுத்தியாக வேண்டும். கொள்கைகள் வகுத்தல் திட் டங்கள் தீட்டுதலில் ஈடுபடும் ஒவ்வொரு தோழரும் இதை மனத்தில் கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்.

மேலும் எமது அமைப்பில் அதன் நடைமுறையில் முகாமைத்துவம் நிர்வாகம், ஒருங்கிணைப்பு என்பன வற்றில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்பதனை நாம் கூறியாகவேண்டும். இதற்குரிய வகையில் எமது முன்னணியில் ஒருங்கிணைப்பு, ஒழுங்கமைப்பு, கடமைகள், அதிகாரங்கள், நிர்வாகம் என்பனபற்றி நாம் திட்டமிட்டாக வேண்டும். அதனை இந்த காங்கிரஸ் நிறைவேற்றும் என்று நான் கருதுகிறேன். முன்னணியுள் ஏற்பட்டுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற் கும் முன்னணியின் வளர்ச்சியிலுள்ள தடைகளை

17

உடைத்தெறிவதற்கும் இது மிகவும் அவசியமான தாகும்.

ஆனால் அரசாங்க, தோழர்களே! எமது *முன்னணியின் முதலாவது மாநாட்டில் நாம் திட்டமிட்ட வேலைகளில் சில விடயங்கள் இன்னும் நன்கு நிறைவேற முடியாமல் இருக்கின்றன. குறிப்பாக, ஈழத்தின் குட்டி முதலா ளித்துவ வர்க்கங்களை அணிதிரட்டுவது என்று திட்ட மிட்டோம். தனியார் ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றபகுதியினரை நாம் திரட்டுவதில் வெற்றிபெறவில்லை. மேலும் முக்கிய மான விடயம் என்னவெனில் மலையகப் பாட்டாளி மக்களைத் திரட்டவேண்டும் என்பதும் எமது பிர தான கடமை என்று ஏற்றுக் கொண்டோம். ஆனால் அதில் நாம் எய்தியிருக்கும் வெற்றி பூரணப்படாத தாகும்.

எனவே இவ்வடிப்படைக் குறைபாடுகள் ஏன் நிகழ்ந்தன என்பதற்கான காரணத்தைச் சரியாக ஆராய்ந்து அக்குறைபாடுகளை நீக்கக்கூடிய புதிய திட்டங்களை வகுத்து நாம் செயற்படுத்தவேண்டும். அணி திரட்டுவதில் குறைபாடுகள் இருக்கின்ற அதே வேளையில் நாம்பெற்றிருக்கும் வெற்றிகளை மதீப்பீடு கள் செய்துகொள்வதும், நாம் எதிர்காலத்தில் நம்பிக் கையோடு நடை போடுவதற்குத் துணையாக அமையும் என்பது எனது பணிவான கருத்தாகும்.

அமைப்பற்று இருந்த ஈழ மாணவர்களை ஈழ மாணவர் பொது மன்றத்தின் தலைமையில் அணி திரட்டி இருக்கிறோம்.

*ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முதலாவது மாநாடு 1981 அக்டோபர் 4 ஆம் திகதி நடைபெற்றது

18

ஈழ மக்கள் மத்தியில் புரட்சிகர உணர்வுகளோடு அமைப்பு ரீதியாகச் செயல்பட்ட வரலாறே இல்லாத ஈழப்பெண்களை அணிதிரட்டுவதில் ஈழப்பெண்கள் விடுதலை முன்னணி குறிப்பிடத்தக்க சாதனைகளை ஆக்கி இருக்கிறது.

ஒரு காலத்தில் சாதிவா தங்களை வர்க்கக் கோட் பாடு எனக் கருதித் தியாகங்கள் பல செய்து போரா டிய தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கூலி விவசாய தொழிலாளி வர்க்கத்தையும், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய ஈழப்பகுதிகளில் உள்ள ஏழை, கூலி விவசாயிகளையும், ஈழத்தில் கல் உடைக்கும், கள் இறக்கும் தொழிலாளர்களையும் கிராமிய தொழி லாளர் விவசாயிகள் முன்னணியின் தலைமையில் குறிப்பிடத்தக்க அளவு அணி திரட்டியிருக்கிறோம்.

ஈழத்தின் கடற்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு தொழில் புரிந்து வாழ்க்கை நடத்திவரும் கடல்தொழிலாளர்களையும் குறிப்பிடத்தக்க அளவு கடல் தொழிலாளர் முன்னணியின் கீழ் அணி திரட்டி யிருக்கிறோம்.

இதேபோல பிற அணிகளினதும் செயல்ரீதியான வெற்றிகள் மதிப்பீட்டுக்குரியவையாகும். இம் மதிப் பீடுகள் வெறுமனே புளகாங்கிதம் அடைவதற்காக அல்ல; மாறாக நமது முன்னணி அமைப்புகளை எவ்வாறு மேலும் விரிவாகவும் பரவலாகவும் ஆழ மாகவும் பலப்படுத்துவது என்பதைத் திட்டமிடுவ தற்கு- நடைமுறைப்படுத்துவதற்குக் கடந்த காலத் தோல்வி அனுபவங்களும் வெற்றி அனுபவங்களும் அடிப்படையாக அமைதல் 1 வேண்டும் என்பதையே நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

1983 ஆம் ஆண்டு சூலைக் கலவரத் தாக்கத்தின் விளைவாக மக்கள் விடுதலைப் படையை உடனடியாக

19

விரிவடையச் செய்ய நேரிட்டது. இத் திடீர் மாற்றத் தின் விளைவாகப் பல தவிர்க்க முடியாத குறைபாடு கள் எழுந்தன என்பதும் உண்மைதான். இக் குறை பாடுகளை எவ்வாறு நாம் களைந்தெறிய வேண்டும் மக்கள் விடுதலைப் படையை மேலும் எவ்வாறு நாம் பலப்படுத்தவேண்டும் என்பதற்கான ஆலோசனை களையும் கருத்துகளையும் இக் காங்கிரஸ் பரிமாறிக் கொண்டு திட்டமிடும் என நான் கருதுகிறேன்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வளர்ச்சியில் சில தடைகள் ஏற்பட்டமைக்கு 1981 ஏப்ரலிலும் 1983 ஏப்ரலிலும் நமது முன்னணித் தோழர்களில் முக்கியமான தோழர்கள் சிலர் தற் செயலாகச் சிறீலங்கா அரசப்படையினரால் கைதுசெய் யப்பட நேர்ந்ததுவும் ஒரு காரணமாகும். இதனால் குறிப்பிட்ட காலங்களுக்குச் சில வேலை நடைமுறை களைப் பெருமளவில் தடைசெய்ய நேர்ந்தது என்பது வும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

எனினும் அன்று கைதுசெய்யப்பட்ட தோழர்கள் சூலைக் கலவரக் காலத்தில் இடம்பெற்ற சிறைப்படு கொலைகளிலிருந்து இருவர் தவிர ஏனையோர் தப்பியதுவும் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து அவர்களை எமது மக்கள் விடுதலைப் படை வெளியே மீட்டதுவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் சூலைக் கலவரத்தை நான் எண்ணிப் பார்க்கிறேன். வெலிக்கடை சிறைப் கொலைச் சம்பவம்பற்றிய செய்தி எமக்குக் கிடைத்த நேரத்தில் சிறைச்சாலையிலிருந்த அனைவரும் கொலை செய்யப்பட்டுவிட்டதாக முதலில் செய்திகள் வந்தன. எங்கள் நெஞ்சங்கள் அப்போது இரும்பால் அறையப்பட்டிருந்தன. ஈழ மக்கள் ஒவ்வொருவரினது வீடும் செத்த வீடாகக் காட்சி அளித்தது. ஆனால் பின்னர் சிறைப்படுகொலையிலிருந்து தப் பியவர்களின் விபரம் அறிந்த பொழுது துன்பத்தின் இடையில் சிறிது மகிழ்ச்சியையும் பெறமுடிந்தது.

20

சூலைக் கலவரம் ஈழத் தமிழர்களைப் பெருங் கொடூரமான நிலைமைக்கு உள்ளாக்கியது. எனி னும் சர்வதேச ரீதியாக ஈழம் என்பது ஒரு கனவு என்ற நிலையிலிருந்து நனவு என்றநிலையை நோக்கிய மாற்றத்திற்கும் உள்ளாக்கியது. எமக்கு உறுதுணையாக நிற்கும் தமிழக மக்களையும் இந்திய மக்களையும் நாம் என்றென்றைக்கும் மறக்கமுடியாது. நாம் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டியது நமது வரலாற்றுக் கடமையாகவும் உள்ளது.

மேலும் சர்வதேச ரீதியில் பாட்டளி வர்க்கச் சக்திகள் தேசிய விடுதலை மற்றும் முற்போக்கு இயக்கங்கள் என்பன சூலைக்கலவரத்தின் பின்னர் ஈழ மக்களின் நிலைபற்றி அறிவதில் மிகவும் அக்கறை காட்டின. சில நாடுகளும் சில இயக்கங்களும், தனி நபர்களும் ஈழ விடுதலைக்கு ஆதரவாக நிற்க முன் வந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க தாகும். எனவே நமது ஸ்தாபனத்தின் சர்வதேசத் தொடர்புகளை விரிவாக்க வேண்டிய வேலைகளை யும் கொள்கைகளையும் நாம் திட்டமிட்டு மேற் கொள்ளவேண்டியுள்ளது.

இனவெறிபிடித்துப் பேரினவாத ஆதிக்க
நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிறீலங்கா அரசு ஈழ மக்களையும்
ஈழ விடுதலைப் போராட்டத்தையும் மேலும் அடக்கி ஒடுக்கும் நடவடிக்கை களை மேற் கொள்ளுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் கையாளான இஸ்ரேலிய அரசும் இன்று உறுதுணையாக நிற்கின்றன, அமெரிக்கா, இந்து மாகடல் முழுவதையும் தனது இராணுவ

21

இலக்கிற்கு உள்ளாக்கும்பொருட்டு திருகோணமலை யைத் தனது தளப்பிரதேசமாக ஆக்கும் நடவடிக் கைகளில் ஈடுப்பட்டு வருகிறது,

இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாத சிறீலங்கா தரகு முதலாளித்துவ, சிங்கள நிலப்பிரபுத்துவ அரசாங் கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையை நாடி நிற்கின்றது. அமெரிக்காவின் நவீன காலனித்துவம் மேலும் மேலும் இலங்கையில் பலப்பட்டு வருகிறது. ஆனால் சிறீலங்கா அரசும் அமெரிக்க ஏகாதிபத்தி யமும் வெளிப்படைத் தோற்றம் அளிப்பினும்
உள் ளடக்கத்தில் நிரந்தர பலமானவர்கள் அல்ல.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்புகள் சிறிது சிறிதாக முறிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மூன்றாம் உலக நாடுகளிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான யுத்த தயாரிப்புகளில் அந்நாடுகளின் மக் கள் ஈடுபட்டு வருகிறார்கள். சர்வதேசப் பொருளா தார நெருக்கடியானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தைச் சூழவரநின்று பலமாகத் தாக்குகின்றது.

அமெரிக்காவினுள் வேலையின்மை, விலைவாசி ஏற்றம், சமூகச் செலவினம் குறையும் போக்கு என் பன அதன் தற்போதைய பொருளாதார அமைப் பினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டுமல்லாது சர்வதேச முதலாளிகள் அனைவரும் மறைமுகமாக வளர்ந்து கொண்டிருக்கும் உலகப் பெருமன்றத்தினால் ஆபத்து களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். எனவே சிறீலங்கா அரசு தனக்கு எப்போதும் ஏகாதிபத்திய பலம் துணையாக இருக்கும் என்று நம்புவது விரை வில் கனவாகவே முடிவடையும்.

22

ஜே. ஆர். ஜெயவர்த்தனேயின் ஆட்சிக்கு எதி’ ரான அரசியல் போராட்டம் சிங்கள மக்கள் மத்தி யிலும் மறைமுகமாகத் திரட்சி அடைந்து வருகின் றது. கொழும்பில் நடைபெற்ற கடந்த மேதினம் இதற்குச்சாட்சியாகும் சிங்கள மக்கள்மத்தியில்உள்ள முற்போக்கு சக்திகளிடம் வழிகாட்டி துணை நின்று பலப்படுத்த வேண்டியதும் எமது கடமையாக. உள்ளது.

என்னருமைத் தோழர்களே!

ஈழத்தில் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக இந்த காலக்கட்டத்தில் போராடிக்கொண்டிருக் கின்ற நாம் யார் யாரோடு ஐக்கிய முன்னணி யைக் கட்டிக் கொள்வது என்பதனையும் அதனை எவ்வாறு சரியாக நடைமுறைப்படுத்துவது என்பத னையும் வரையறை செய்து தீர்மானித்து திட்டமிட் டுச் செயல்படுவது நம் முன்னால் உள்ள கடமை யாக உள்ளது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்று பிரதா னமாக ஐந்து இயக்கங்கள் உள்ளன. இவற்றுள் எமது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப் புரட்சி அமைப்பு, தமிழ் ஈழ விடுதலை இயக் கம், ஆகிய மூன்றிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஐக்கிய முன்னணியை எவ்வாறு பலப்படுத்துவது என்பதையும் மேலும் ஏனைய இரு பிரதான இயக் கங்கள் உள்ளிட்ட விரிவான ஐக்கிய முன்னணியினை எவ்வாறு கட்டி எழுப்புவது என்பதனையும் நாம் தீர்க்கமாக ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது.

இயக்கங்களுக்கு இடையிலான தனிநபர் பிரச் சினை எங்களுக்கு முக்கியமானது அல்ல. ஐக்கிய முன்னணி என்பது இந்த காலக்கட்டத்தின் மதிப் பீட்டிலிருந்தும் ஈழ மக்கள் சமூகத்தின் வர்க்கங்

23

களைப் பற்றிய பகுப்பாய்விலிருந்தும் நாம் தீர்மா னிக்க வேண்டிய விடயமாகும். நபர்களின் அடிப் படையில் பிரச்சினைகளை அணுகுவது முதலாளி வர்க்கத்தின் சிந்தனை கூட அல்ல; அது குட்டி முத லாளித்துவச் சிந்தனை என்று நான் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். ஆகவே இக் காலக்கட்டத்தில் ஏற்பட வேண்டிய வர்க்கங்களின் ஐக்கியம்பற்றியும் அவற்றின் நடைமுறைகள் பற்றியும், நாம் தீர்க்க மாக ஆலோசித்தாகவேண்டும்.

பெருமைக்குரிய தோழர்களே!

எங்கள் தோள்களில் பல நூற்றுக்கணக்கான கடமைகள் சுமைகளாக ஏறியுள்ளன. அவற்றைத் தாங்கிச் சென்று நிறைவேற்ற வேண்டியது நாம் நமது தேச மக்களுக்குச் செய்யும் கடமை மட்டு மல்ல; சர்வதேசக்கடமையும் ஆகும்.

ஒரு தோழருக்குத் துன்பம் நேரும்போது இன் னொருவர் தோள் கொடுத்து நிற்போம். ஒரு தோழருக்கு மனச் சோர்வு ஏற்படும்போது இன் னொருவர் அவரை உற்சாகப் படுத்தியாகவேண்டும். நமது புரட்சிகரப் பாதை என்பது மாலை நேர விருந்து அல்ல; வேடிக்கை விளையாட்டும் அல்ல, இந் தப் பாதையில் துன்பங்கள்தான் எமது இன்பங்கள். இயக்கத்திலுள்ள ஒவ்வொருவரும் “தோழர்” என் கிற பதத்தினை வெறும் சம்பிரதாயச் சடங்காக அல்லாமல் உண்மையான அர்த்த புஷ்டியுடையது என்று அடையாளம் கண்டு அதற்குரிய வகையில் உண்மையாக நடந்துகொள்வோம்.

நாம் கடந்து செல்ல வேண்டிய காட்டாறுகள் பல நூற்றுக்கணக்கானவை. நிறைவேற்றி முடிக்க வேண்டிய கடமைகள் பல்லாயிரக் கணக்கானவை. இதைத் தனி நபர்களோ சில நபர்கள் சேர்ந்த

24

குழுக்களோ ஒரு சிறு இயக்கமோ நிறைவேற்றி விடமுடியாது. மக்கள் அரசியல் ரீதியில் அணி திரண்டு ஆயுதம் தாங்கும் போதுதான் இந்த வெற்றி கிட்டும் என்பதை நாம் நடைமுறையில் காண முடியும்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களின் ஆயுதப்போராட்டம் என்பதனை நாம் நடைமுறை யில் செயல் படுத்திக் காட்டவேண்டும். நாம் கடைப்பி டிக்கும் மார்க்சிச லெனினிசம் என்பது நமது நடை முறைக்கு வழி காட்டுகின்ற சித்தாந்தமே ஆகும். அதனை நமது மண்ணுக்குரிய வகையில் நடைமுறைப் படுத்துவோம்.

மார்க்சிச லெனினிசச் சித்தாந்தத்தின் பாதையில் செயல்படுகின்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன் னணியின் தலைமையில் தொழிலாளர்கள் விவசாயிகள், முற்போக்குப்புத்திஜீவிகள், ஊழியர்கள் ஆகியோரை அணி திரட்டியும் ஈழ விடுதலையை நோக்கமாகக் கொண்டு போராடும் ஏனைய இயக்கங்களோடு ஐக் கிய முன்னணியைக் கட்டி எழுப்பியும் சர்வதேசிய மக்களின் ஆதரவோடு எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்போம் என்று இக் காங்கிரசில் நாம் அனைவரும் மீண்டும் உறுதி செய்துகொள்வோம்.

தோழர்கள் அனைவருக்கும் என் அன்பும், மதிப் பும் கலந்த புரட்சிகர தோழமை வணக்கங்களைக் கூறி அமர்கின்றேனு.

வெற்றிவரை புரட்சி