கூடவே வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பு கிறீன்லாந்தை எப்படியாவது தனது கையிற்குள் கொண்டுவருவதும் இதற்குள் அடங்குகின்றது.
நாட்டிற்குள் பொருளாதார சம நிலை அற்ற நிலையை ஏற்படுத்தும் அந்த நாட்டின் பணத்தின் மதிப்பை இழக்கச் செய்யும் கடதாசிப் பொருளாதாரப் போரில் வளம் மிக்க நாடுகளும் தமது உற்பத்திகளை நியாய விலைக்கு சந்தைப்படுத்தி பொருளாதாரத்தை தளம்பல் அற்ற நிலையில் வைத்திருக்க முடியவில்லை.
இதுதான் ஈரானில் நடைபெறுகின்றது.
வெனிசுலாவிலும் நடாத்தப்பட்டது
1980 களில் ஈரான் முடிக்குரிய அரச வாழ்க்கை என்றாக திகழ்ந்த பணக்காரர் எண்ணை முதலாளிகளின் ஆட்சி தூக்கிய எறியப்பட்ட போது மன்னர் ‘ஷா’ அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார் தன் குடும்ப சகிதம்.
அவர்களுடன் அவர்கள் சார்பான இந்த செல்வந்த குடும்பங்கள மேற்குலக நாடுகளுக்கு குடிபெயர்ந்து தமது சொகுசு வாழ்வை தொடர்கின்றார்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக
இவர்கள் ஈரானின் நலன்களை மேற்குலக நாடுகளின் நலன்களுக்கு அடகு வைத்தவர்கள்…. அதனால் அவர்களுடன் இணக்கமாக இன்றும் உள்ளவர்கள்
இவர்கள்தான் தற்போதைய ஈரான் உள்நாட்டுக் குழப்பங்களின் சூத்திரதாரிகள் இவர்களுடன் ஈரானில் உள்ள மத இன முரண்பாட்டால் உருவான அமெரிக்க சார்ப்பு ஈரான் குழுக்களும் இணைந்துள்ளன.
டாலரினால் கட்டப்பட்டுக் கிடக்கும் உலகம் அதனை அச்சிடுவதற்கான முழுமையான நாணயக் கயிற்றை கொண்டுள்ள இஸ்ரேலின் அமெரிக்க வர்தகமும் இதற்குள் ஆளுமை செலுத்துகின்றது.
திறந்த பொருளாதாரம் என்ற கொள்கை நாடுகளின் சுய சார்ப்புப் பொருளாதாரத்தை பின் தள்ளி வேறு நாடுகளின் உற்பத்தியில் தமது நாட்டிற்குள் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தாத போக்கின் வெளிப்பாடுகள் முன்னுக்கு கொண்டு வந்திருக்கின்றது.
அதனால்தான் எண்ணை வளம் உள்ள நாடுகள் கூட இன்று வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தில் தத்தளிக்கின்றன.
இப்படியாக மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் குறைவான இலங்கை போன்ற 3ம் உலக நாடுகள் இவ்விடயத்தில் இதற்கான பொறிகளை ‘யாரும்’ வைத்தால் மிக இலகுவில் ஒரிரு தினங்களில் அகப்பட்டுவிடும் அபாய நிலையிற்குள் இருக்கின்றன.
இதன் ஒரு வடிவம்தான் ஐஎம்எவ் இல் தொடர்ந்தும் தங்கியிருத்தல் என்ற கடன் உதவி செயற்பாடுகள் ஆகும்.
எனவே சுய பொருளாதாரத்தை கட்டியமைத்தல் என்பது இலங்கையிற்கு மட்டும் அல்ல வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகளுக்கு பொருத்தமான தேவையாகின்றது.
இதனைத்தான் தென் அமெரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகள் அதிகம் மேற்கொள்கின்றன. இதில் தற்போது தென் ஆபிரிக்காவின் பல நாடுகளும் இணைந்து வருகின்றன.
இவ் நாடுகளின் (தன்) நிறைவான வாழ்வு என்பதை முன்னிறுத்தி வசதியான வாழ்வு என்பதை இரண்டாம் பட்சமாக்கிய இவர்களின் சிந்தனையும் செயற்பாடும் அதிகம் காரணமாகி இருக்கின்றது.
இதற்காகத்தான் இவ் நாடுகள் போராடி தம்மிடம் உள்ள மிகக் குறைந்த வளங்களை கூட பாதுகாத்தல் கூடவே தமக்கு தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்தல் என்றான விடாபிடியான போராட்ட முறையை நாமும் கையாள வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
அது அந்நிய செலவாணியை ஈட்டும் தேயிலை றப்பர் கொக்கோ என்பனவற்றிற்கு அப்பால் நெல்லு கடல் உணவுகள் எனைய வெப்ப வலய நாடுகளின் சிறப்பான பழங்கள் ஆடை உற்பத்தி என்றாக நாம் எம்மை விரிவுபடுத்தி தன் நிறைவு காண வேண்டும்.
சூரிய சக்தி காற்றாலை என்றான மின்சாரத்தின் அடிப்படையிலான ஆற்றலை நாம் அன்றாட வாழ்விற்கும் ஆலை செயற்பாடுகளுக்கும் அதிகம் பாவிக்க வேண்டும் என்றாக அதிகம் மாறி ஆக வேண்டும்.
எண்ணையை அதிகம் இறக்குமதி செய்யும் அதிக அந்நியச் செலவாணி தேவைகளை மட்டுப்படுத்தியாக வேண்டும்.
இவற்றை நோக்கி நாம் நிதானமாக உறுதியாக நகர்ந்தாக வேண்டும்
அன்றேல் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையையும் பொறிக்குள் வீழ்த்த மேலாதிக்கவாதிகள் முனையும் போது நாமும் வீழ்ந்துவிடும் அபாயத்திற்குள் தள்ளப்பட்டுவிடுவோம்.