உலகை பங்கு போட்டு தோற்றுப் போகும் அமெரிக்க இஸ்ரேல் யுத்தம்


ஆனால் என்(ம்) கேள்வி… உலக மக்களின் கேள்வி… அப்போ எப்படி 500 வரையிலானவரகள் இங்கு கொல்லப்பட்டது எப்படி அதிலும் பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர்கள் என்றாக 150 மேற்பட்டவர்கள்
இந்த துல்லியத்திற்கு நிச்சயம் இஸ்ரேலும் அமெரிக்காவும் வரலாற்றல் பதில் கூறியாக வேண்டும்.


இதனை விட குறைந்த எண்ணிக்கையிலான மரணங்களை(1982-ஆம் ஆண்டு துஜைல் (Dujail) என்ற கிராமத்தில் 148 ஷியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு சதாம் ஹுசைன் பொறுப்பாளி என்பது முதன்மையான குற்றச்சாட்டாகும். இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஈராக் உயர் நீதிமன்றத்தால் நவம்பர் 5, 2006 அன்று மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதிக்கப்பட்டது.) ஏற்படுத்தினார் என்று சொல்லித்தான் சதாம் மீது அவர்கள் நாட்டில் உருவாக்கிய பொம்மை நீதி மன்றத்தில் சதாம் இற்கு தூக்குத் தண்டனை என்றாக ‘தீர்ப்பு’ வழங்கி தூக்கில் இட்டார்கள்


அன்று நடாத்தியது நியாயம் என்று மனித குலம் மௌனமாக கடந்து போனால் தற்போதைய கொலைகளுக்கு என்ன தீர்வு வழங்கப் போகின்றது தற்போது.

மதப் பிரிவுகளை மட்டும் அல்ல மனங்களையும் இணைத்து வைத்தாக முடிந்திருக்கின்றது காமனியின் கொலை.


வளைகுடா நாடுகளில் மத்தியதரை கடல் பகுதியில் உள்ள எண்ணை எரிவாயுக்கள் போரின் இறுதியில் வெல்பவர்கள் பங்கு போடலாம் என்பதாக பிரான்;சும் ஜேர்மனியும் அவசரப்பட்டு இந்த யுத்த்திற்கு அமெரிக்க இஸ்ரேல் பக்கம் தாம் நிற்பதாக காட்டி கொள்வதற்கு அவசரம் காட்டி நிற்கின்றன.

கூடவே செங்கடல், ஹார்முஸ் ஜலசந்தி வழியேயான கடல் போக்குவரத்தில் தமது செல்வாக்கு பங்கு என்றாகவும் இந்த இரு விடயங்களிலும் தமக்கும் பங்கு தரவேண்டும் தாமும் போரில் பங்காளிகள் என்றாக வெல்லும் என்று தாம் நம்பும் கூட்டில் இணைவதற்கு அவசரம் காட்டி இருப்பதாக பிரான்ஸ் உம் ஜேர்மனியும் காட்டி இருக்கின்றன.


உழைக்காமல் ஓசியில் சாப்பிடும் முதலாளித்துவ் சுரண்டலின் முதற் கூறுகளாகவே அவர்கள் தொடர விரும்புகின்றனர்.

முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப் போர்களின் முடிவுகளில் வென்ற அணி தோற்ற அணிகளின் நாடுகள் பிரதேசங்களை வழங்களை இவ்வாறுதான் பங்கு போட்டன. இதனை இப்போதும் தொடர விரும்புகின்றன.


ஆனால் என்னதான் நடந்தாலும் கால ஓட்டத்தில் இந்த பங்கு போடல் அந்தந்த நாடுகளின் உறுதியான போராட்டம் என்றாகி அந்த நாடுகளின் சுயாதிபத்தியத்தை நிறுவித்தான் வந்திருக்கின்றது.


ஆனால் இந்த விடுதலைக்கான காலம் நிறையவே எடுக்கும்.

கூடவே இழப்புகளை அதிகம் ஏற்படுத்தித்தான் நடைபெறும்.


பிரித்தானிய காலனிகளாகவும், ஸ்பெயின் காலனிகளாகவும், பிரான்ஸ் காலனிகளாகவும் இருந்தவவை இன்று வரை நவ காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் இருப்பது இங்கு கவனத்தில் எடுத்தாக வேண்டும்.

இந்த அணி சேரலில் சீனா ஈரான் பக்கம் சென்றிருப்பது இங்கு முக்கிய கவனத்தைப் பெறுகின்றது. அது ரஸ்யாவின் இணைப்பிற்கான முதற்படியாகவும் நாம் பார்க்கலாம்.


அமெரிக்கா என்னதான் சொன்னாலும் தான்தான் உலகில் ‘முதன்மையானவன்’ என்ற இடத்தை இழந்துவிட்டதே உண்மை நிலை அந்த இடத்தை பிடிப்பதற்காகவும் இந்த ஈரான் மீதான தாக்குதலை ஏற்படுத்தியதாக உணர முடிகின்றது.

அமெரிக்காவின் டாலரை கட்டுப்படுத்தும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் அமெரிக்கா இருப்பதுவும் இங்கு இஸ்ரேல் ‘அனுமதி” கேளாமல் நடக்க முடியாத கட்டுக்கள் அமெரிக்கா மாட்டி இருப்பதுவும் தனது வரிப் போரை உலக நாடுகளில் செலுத்துவதில் உள்ளுர் நீதி மன்றத்தால் தோற்று இருக்கும் ட்றம்பிற்கு இந்த போர் தேவையாக உள்ளது.


உக்ரோனை முன் நிறுத்தி அவர்களுக்கு பின்னால் ஒழிந்து நின்று யுத்தம் செய்யும் அமெரிக்க தலமை இராணுவப் பலத்தில் இரண்டாம் இடத்திற்கு சென்று விட்டதாக உணரப்படுகின்றது… கூடவே ஈரானுக்கு எதிரான தாக்குதலில் இழந்த அதி சூர போர் விமான(F15) இழப்பும் இதனைத்தான் நிறுவி நிற்கின்றது.

இந்த போர் விமானம் உட்பட்ட பல கருவிகளுக்கான தொழில் நுட்ப சிறுபாகங்களில் இன்று உலகம் தங்கியிருப்பது அதிகம் சீனாவிடம் என்பதுதான் இங்கு அமெரிக்காவும் ஏனைய நேட்டோ நாடுகளும் இஸ்ரேலும் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட பொறியிற்குள் மாட்டப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் ஆகும்.


எனவே இந்த போர் அதி நவீன ஆயுதங்கள் பாவித்து உலகை கூறு போடும் செயற்பாடுகளை மதுராவை கடத்தியது போல் ஒரு இரவில் என்றாக ஒரு மாத்திற்குள் முடிக்கவே அமெரிக்காவும் இஸ்ரேலும் இதன் கூட்டாளிகளும் விரும்புகின்றன.

அதுவே ஈரானின் தோற்றுவிடாத விருhமாக வரலாறு கூறி நிற்கப் போகின்றது.


ஆனாலும் போரின் இறுதியில் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பதாக எண்ணை வழங்களையும் கடற்பாதைத் தடங்களையும் தம்முடையது என்றாக சுருட்டிக் கொண்டு தனி உடமையாக்கி அமெரிக்க இஸ்ரேல் இணைந்த கூட்டுக் களவாணிகள் சொல்லி நிற்கப் போகின்றார்கள்.