உலக புத்தக நாள்:

ஒலி வடிவில் பேச்சு வழக்காக இருந்த விடயங்கள் எழுத்து உருவாக்கம் என்று பரிணாமம் அடைந்தது மொழிகளாக அடையாளப்படுத்தப்பட்ட போது அவற்றைப் கல் ஏனைய உலோகங்களில் மனிதன் அவற்றை பொறித்து பதிவு செய்து வைத்தான்.

ஆனால் இது மிகவும் மெதுவாக பதிய வைக்கும் முறையாக இருந்தமையினால் மனிதனின் தேடல் இலை, ஓலை என்றாக பரிணாமம் அடைய வைத்து காகிதத்தை கண்டு பிடிக்க வைத்தது.
இதுதான் உண்மையில் எழுத்தின் முன்னேற்றகரமான புரட்சி என்று சொல்லலாம்.

இதன் பின்பே தகவல்களை ஆவணப்படுத்தல் என்றாகி எழுத்துதல் அதனை பிரதி செய்தல் என்றாகி அவற்றை ஒன்றாக சேர்த்து இணைத்து வைத்தல் என்பதாக புத்தகம் என்ற வடிவம் வளர்ச்சியும் அடைந்தது
இன்று உலக புத்தக தினம்.

வாசிக்கும் பழக்கம் அருகி வருகின்றது என்பது புத்கங்களை வாசித்தல் என்பது குறைந்து வருகின்றது என்பதன் வெளிப்படுத்தல்தான்
ஓளி ஒலி ஊடகங்களும் இலத்திரன் இயல் ஊடகங்களும் நம் வாழ்வில் அதிகம் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பின்பு நேரடியாக புத்தகங்களை வாசித்தல் என்பது குறைந்திருக்கின்றது என்பது உண்மையே.

ஆனாலும் பாடசாலைகளிலும் பரீட்சைகளிலும் முக்கிய ஆவணங்களை கையெழுத்தால் உறுதிப்படுத்த வேண்டிய விடயங்களும் இன்னமும் ஒரு வகை அச்சுச் செய்த புத்கங்களாகவே நடைமுறையில் உள்ளன

இனியும் அவ்வாறு தொடர்வதற்குரிய வாய்ப்புக்களே அதிகம்
இதற்கு முக்கிய காரணம் அத்தாட்சிப்படுத்தல் உறுதிப்படுத்தில் நம்பகத் தன்மை என்றாக விடயங்கள் இந்த அச்சுப் பிரதியிலேயே அதிகம் உள்ளதே காரணம்.

இதனால் ஏதோ ஒரு வடிவத்திலான புத்தகம் என்பது எம் வாழ்வில் இருந்து அகல முடியாக அரவணைப்பாகவே இன்னமும் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு அப்பால் புத்தகத்தை அச்சுப் பிரதியாக வாசிக்கும் போது ஏற்படும் மனிதனுக்கும் அந்த புத்தகத்தில் உள்ளடங்கி இருக்கும் விடயத்திற்குமான இணைப்பு உறவு வேறு எந்த வடிவத்தையும் விட உச்சமாக இருப்பதே உணர்வு உள்ள உண்மையாகும்.

எங்கெல்லாம் நாம் பயணமாகின்றோமோ அங்கெல்லாம் மிக இலகுவாக எடுத்துச் செல்லும் தகவல் களஞ்சியமாக புத்தகம் இருந்து அது மக்களுடன் நெருக்கமாகிப் போகின்றது.

ஒரு பயணத்தின் போது… பொழுது போக்காக பூங்காவிற்கு போகும் போது… நித்திரையிற்கு போகும் போது… தூக்கத்திற்கு முன்பு படிப்பதற்கு… இதற்கும் அப்பால் கல்வி நிறுவனங்களில் பாடங்களை கற்பதற்கு என்றாக எங்கும் இந்த புத்தகம் நிறைந்து இருக்கின்றது.

ஒரு இடத்தில் உட்கார்ந்து யாருக்காகவும் காத்திருக்கும் போது மற்றைய எதனையும் விட புத்தகம் எமக்கு உற்ற தோழனாக காத்திருப்பை அர்த்மான மகிழ்வாக்கின்றது.

நாம் வாழும் தாயக சூழலில் கிராமம் தோறும் உருவான சன சமூக நிலையங்கள் கூடுதல்… சந்திப்பு…. எனறாக ஆரம்பிக்கப்பட்டாலும் அவை எப்போது வாசிக சாலையாக பரிணாமம் அடைந்து புத்தகங்களை தனக்குள் இணைத்த போதுதான் அது முழுமை பெற்று வீச்சாக அடையாளப்படுத்தப்பட்டது.

அப்போது இந்த சன சமூக நிலையங்கள் வாசிகசாலைகள் என்றாக தனக்கான தரத்தையும் உயர்த்தி பக்குவம் அடைந்தும் கொண்டன.

ஒரு பிரதியை பலரும் மாறி மாறி வாசிக்கும், பயன்படுத்தும் முறமை இந்த வாசிக சாலை முறையில் நூலக முறையில் அதிகம் ஒழுங்கமைக்கப்பட்டது இதன் சிறப்பு.

இதற்குள் தினசரி புதினம், செய்திகள் என்றாக பத்திரிகைகள், சஞ்சிகைகள் இணைந்து மேன் மேலும் இந்த புத்தகத்தை கொண்டிருக்கும் வாசிக சாலைகள் தமது முழுமையை அடைந்தன.

அதனால்தான் நூலகங்கள் இந்த புத்தகங்களை மையப்படுத்தி பொக்கிசமாகி போற்றப்பட்டன.

இதன் தாக்கத்தை நாம் யாழ் நூலகம் எரிக்கப்பட் போது புத்தகங்களின் அழிப்பு என்று அதிகம் உணர்வாக நாம் இணைந்தும் அனுபவித்தோம்.
அந்த துன்பியல் தீக்கிரையிற்கு எதிராக போராடுவது என்றாக உண்மையில் வலுச் சேர்த்தவை அங்கிருந்து புத்தகங்கள்தான்
எனக்கு எழுதுவதில் ஏற்பட்ட ஆர்வம் பல்வேறு பதிவுகளைச் செய்ய வைத்து. ஆனால் அவற்றை புத்தகம் ஆக்குவதில் நான் அதிக ஆர்வத்தை எனக்குள் கொண்டிருக்கவில்லை.

ஆனால் என் நண்பர்கள் வாசகர்கள் பலரும் எழுத்துக்கள் ஆவணமாக்கப்பட வேண்டும் என்பதாகவும் அதன் அவசியம் என்றாக எனது எழுத்துகளை முதன் முதலாக ஒரு புத்தகமாக வெளிக்கொணர்வதில் கிடைத்த நிறைவு அதன் வெளியீட்டின் போது என்றால் உணரப்பட்டது.

திருகணையும் திருமேனியரும் என்ற என் முதல் புத்தகம் எனக்குள் ஏற்படுத்திய மன நிறைவு அதனை புத்தகமாக வாசித்தவர்கள் கூறிய கருத்துகளிலானேயே ஏற்பட்டது.

புத்தக வெளியீட்டில் இதற்கான விமர்சனம், மதிப்பீட்டுரை செய்தவர்கள் முன்வைத்த கருத்துகள் எம் எழுத்துகள் புத்தகம் ஆகி எவ்வளவு தாக்கத்தை ஏற்படுதியுள்ளது என்பதை உணரவும் வைத்தது.

இவ்வருட உலக புத்தக தினத்தில் என் புத்தகமும் இணைவதில் மகிழ்ந்திருக்கின்றேன்.

சர்வதேச புத்தக தினததை நாம் அனைவுரம் இணைந்து முழு அர்தத்துடன் கொண்டாடுவோம்.

புத்தகங்களின் வலிமையை தமிழ்நாடு செல்லும் காலங்களில் அங்குள்ள புத்தகசாலைகள் நூலகங்களுக்கு செல்லும் போது தாயகத்தை விட அதிகம் உணர முடிந்தது.

யுத்தத்தின் பின்னரான தமிழ் பிரதேசங்களின் மீள் உருவாகத்தில் வடக்கில் அமைந்த சத்தியமனை நூலகமும் கிழக்கில் அமைந்த அனாமிகா நூலகமும் புத்தகங்களைத் தாங்கி சமூதாயத்திற்கு வாசிப்பிற்கு அளப்பரிய சேவைகளை தொடங்கி இருக்கின்றன…

புத்தகத்தின் வலிமையை உணர்ந்து வாசிப்பது எவ்வளவு முக்கிய ஒரு சமூகத்திற்கு என்று செயற்படும் அவர்களின் அளப்பரிய முடிவை செயற்பாட்டையும் இந்த புத்தக தினத்தில் வாழ்த்தி வரவேற்போம்.