இதற்கு அப்பால் இந்தியாவின் மதச் சார்பின்மையை தகர்க்கும் பாஜக இன் சனாதனச் செயற்பாடு பாசிசமாக வளர்ந்து வருதலை புரிந்து கொள்ளவும் உதவலாம். இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஆட்சிகளும் அவ்வாறுதான் மதத்தை பாவித்து வந்தன ஏன் மொழியை கூட
உங்கள் கருத்தை விமர்சனங்களை அதிகம் எதிர்பார்கின்றேன்
இலங்கையும் மதச் சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தி முன்னோக்கி நகர்வதற்குரிய அவசியததை இந்திய அனுபவங்களுடன் இணைத்துப் பாருங்கள். அப்போதான் திருகொணமலையில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலை போன்றவற்றiயும் எதிர்காலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் தடுக்கவும் முடியும்
பேராசியர் அ. ராமசாமியின் பதிவு:
வினையும் எதிர்வினையும்
திராவிட முன்னேற்றக்கழகம் தனது எதிரிக்கட்சியாக அஇஅதிமுகவை முன்வைத்து அரசியல் நகர்வுகளைச் செய்வதே சரியானது. அப்படித்தான் அதன் பொறுப்பாளர்கள் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அதன் ஆதரவாளர்களும் கருத்தியல் முன்வைப்பாளர்களும் அப்படி நகர்வதில்லை. குறிப்பாகத் தொலைக்காட்சி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் செயல்படுபவர்கள் இந்தத் தேர்தலில் விஜயின் அரசியல் வருகையையும் அவரது தமிழக வெற்றிக் கழகத்தையுமே எதிரியாகப் பாவித்து வினையாற்றுகின்றார்கள்; சொல்லாடல் நிகழ்த்துகின்றார்கள்.
அதன் மூலம் அந்தக் கட்சிக்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். இது பதற்றத்தின் வெளிப்பாடு.
விஜயின் அரசியலை முன்வைத்து உருவாகும் இத்தகைய பதற்றம் புதிய ஒன்றல்ல. எதிர்தரப்பினர் உருவாக்கும் நடிக அரசியல் நுழைவுகள் ஒவ்வொன்றின்போதும் அத்தகைய பதற்றை வெளிப்படுத்துவது வாடிக்கையாகவே இருந்துள்ளது.
நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், விஜய்காந்த என அரசியல் முகங்களைக் காட்டியது தொடங்கியவுடன் இத்தகைய பதற்றத்தை வெளிப்படுத்திவிடுவார்கள். அந்தப் பதற்றத்தின் மூல காரணம் திமுகவிலிருந்து வெளியேறிப் புதிய கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்த எம் ஜி ராமச்சந்திரன்.
1977 தொடங்கிய அந்தப் பதற்றம் ஒவ்வொரு நடிகரின் அரசியல் நுழைவின் போதும் திரும்பவும் உருவாகிறது. ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் நுழைவின்போது இந்தப் பதற்றம் உருவாகவில்லை. காரணம் எம்ஜி ஆர் உருவாக்கிய பதற்றத்தைத் தனதாக்கிக் கொண்டு வளர்ந்தவர் ஜெ.ஜெயலலிதா.
நடிகர் விஜயின் – அவரது கட்சியின் ஒவ்வொரு வினைக்கும் திமுகவை எதிர்வினையாற்றத் தூண்டுவது ஊடகங்களின் வணிக நோக்கம் மட்டுமல்ல் அரசியல் நோக்கமும். அவர்களின் போக்கோடு இணைந்து நிறபதும் எதிர்வினையாற்றவேண்டும் என நினைப்பதும் திமுகவினரின் பலமல்ல பலவீனம்.
இதற்கு என் கருத்திடல்.…
உண்மை பேராசியரே. இது பொது போக்காக இருந்தாலும் விஜயகாந் வரையிலான கால கட்டத்திற்கு பின்பு தமிழ் நாட்டில் சனாதனத்தின் ஊடுருவல் அதிகமாகி வரும் சூழலில் அதனையும் கருத்தில் கொண்டு செயற்படுதல் அவதானமாக இருத்தல் அவசியம் ஆகின்றது.
இவர்கள்(விஜய் உட்பட்) அனைவரும் எதோ ஒரு வகையில் பாஜக இன் சீடர்களாக இருப்பதுவும் அலலது இருக்கலாம் என்பதுவும் திமுக இன் இந்த எச்சரிகை வினையாற்றலுக்கு காரணமாக இருக்கின்றது.
வாழ்நிலை சிந்தனையை தீர்மானிக்கும் என்ற வகையிலும் சமூக நீதி சிந்தனையில் மதச் சார்பற்ற பாதையில் பயணித்தே ஆகவேண்டி சூழலில் இருக்கும் திமுக… தமிழ் நாடு… ஏன் இந்தியா இதனை கட்டாயம் செய்தாக வேண்டிய வரலாற்றுக் கடமையிற்குள் உள்ளது.
தமிழ் நாட்டை முன்னேறி மாநிலமாக சமூக நீதி வளர்த்து வரும் மாநிலமாக கொண்டு வருவதற்கு திராவிட சிந்தனை… பெரியார் சிந்தனை… இங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்பதினை தவிர்க்க முடியாமல் திமுக தள்ளப்பட்டுள்ளதாக உணரமுடிகின்றது.
உண்மையில் இங்கு அதிமுக தான் தனது தவறுகளை அதிகம் செய்கின்றது.
இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் சமூகக் குழுக்களை தனது மதவாதத்தின் ஊடு பிணைத்து(ளுழஉயைட நபெiநெநசiபெ) எண்கணித முறைப்படி அல்லது வெருட்டி விலைக்கு வாங்கும் சனாதனத்தின் சூழ்ச்சிகளை பாவித்து எந்த எல்லைக்கும் போகும் பாஜக ஐ திமுக தனது வெற்றியிற்காக சாதாரணமாக எடுத்துச் செயற்படுத்த முடியாது.
இந்த திமுக இன் செயற்பாடு நிச்சயம் திமுகவின் விருப்பு வெறுப்பிற்கு அப்பால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மையாகத்தான் அமையும்.
பாஜக எந்த எல்லையிற்கும் போய் பாண்டிச்சேரியை ஆள்வதை நீங்கள் அனுபவரீதியாக அங்கு வாழ்பவராக உணர்வீர்கள்.