இனி நேபாளத்தில் நடந்து வெள்ளப் பெருக்கு எவ்வாறு ஏற்பட்டது என்ற ஆய்விற்கு வருவோம்…
புவியியல் வானியல் வல்லுனர்களின் தகவல்களின் படி….
நிலத்தில் ஏற்பட்ட நில அதிர்வுதான் மண்சரிவாக பனிச் சரிவாக உடைந்த பனிகட்டிகள்… அது போகும் பாதையில் அள்ளிச் சென்ற கல்லு மண்ணு பாறை சேறு சகதி என்றாகத் திரட்டி மலையில் அங்காங்கே அமைந்திருந்த தற்காலக நீர் தேங்கும் வாவி நீர் நிலையை(களை) அடித்து துவசம் செய்து உடைப்பெடுக்க வைத்தது என்று உடனடியாக நம்பப்பட்டது.
ஆனால் வெப்பநிலை அதிகரித்ததால் மிக உயரமான மலையில் இருந்த பனிக் கட்டிகள் உடைந்து செங்குத்தாக பல அடி தூரம் வீழ்ந்து நில அதிர்வு உருவானது என்பதாக தற்போது அறியப்படுகின்றது.
நில அதிர்வினால் வெள்ளப் பெருக்கு எற்பட்டது என்பதற்கு மறுதலையாக பனிப்பாறைகளின் வீழ்ச்சியினால் நில அதிர்வு ஏற்பட்டது என்பதே உண்மை.
அதாவது நேபாளத்தில் இந்த திடீர் பெருவெள்ளம் எந்தவொரு புயலோ அல்லது தொடர் மழையோ இன்றி, ஒரு சங்கிலித் தொடர் இயற்கை நிகழ்வு காரணமாக மிகக் குறுகிய நிமிடங்களில் அரங்கேறியுள்ளது.
இதன் பின்னணியில் நடந்த அறிவியல் மற்றும் புவியியல் நிகழ்வுகளின் முழுமையான வரிசையை ஆய்வாளர்கள்…. வல்லுனர்கள்…. இவ்வாறு தொகுக்கின்றனர்
1. பனிப்பாறை சரிவு (The Glacial Collapse):
இமயமலையின் 17000 அடி உயரமான பகுதியில் அமைந்துள்ள ஒரு 2000 அடி விட்டம் கொண்ட அகலமான இராட்சத பனிப்பாறை, புவி வெப்பமயமாதல் காரணமாக மலையுடனான அதன் அடிவாரப் பிடிப்பை இழந்து திடீரென ஒட்டுமொத்தமாக உடைந்து சரிந்தது. புவியீர்பின் காரணமாக அது கீழ் நோக்கி நகர்ந்தது… வீழ்ந்தது..
இது இமயமலைத் தொடரின் லாங்டாங் ஹிமால் (Langtang Himal) மலைப்பகுதியில் நேபாளம் – சீனா (திபெத்) எல்லையின் மிக அருகில் (Nepal-Tibet Border), எல்லையை நிர்ணயிக்கும் ‘லெண்டே கோலா’ (Lhende Khola) நதிப் பள்ளத்தாக்கிற்கு வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது.
இந்த சரிவு எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தது என்றால், பூமிக்கு அடியில் 5.2 ரிக்டர் அளவில் நில அதிர்வு அலைகளை ஏற்படுத்தும் அளவிற்கு மலையில் அமைந்திருந்த நீர் நிரம்பிய வாவிற்குள் வீழ்ந்த போது ஏற்படுத்தி இருந்தது.
இவ்வளவு அதிர்விற்கும் காரணங்கள்…
முதலாவது அந்த பனிப் பாறையின் கனதி
இரண்டாவது இது சுமார் 4000 அடி வரை செங்குத்தாக வீழ்ந்துதான் மலையின் இன்னொரு பகுதியில் இருந்த நீர் நிலைத்(வாவி) தரையைத் தட்டியது.
இந்த 4000 அடியை புவி ஈர்ப்பினால் தாண்டும் போது அது பெற்ற வேகம் அந்த திண்மத்தின் அளவு இரண்டையும் பெருக்க வரும் உந்துதலே (Momentum வேகம் திணிவு இரண்டையும் பெருக்க(MV) வரும் அளவு) இந்த நில அதிர்வு உணர்விற்கு காரணம்
இயற்பியல்(Physics) கோட்பாடுகளை படித்தவர்கள் இதனை நன்கு அறிவர்
ஆரம்பத்தில் இது நிலநடுக்கம் என சந்தேகிக்கப்பட்டாலும்…?, இது பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட அதிர்வு என விஞ்ஞானிகள் பின்னர் உறுதி செய்தனர்.
2. ஆற்றுப் பாதை அடைப்பு (River Blockage):
மலை உச்சியிலிருந்து உடைந்த மில்லியன் கணக்கான தொன் பனிக்கட்டிகள், இராட்சத பாறைகள் மற்றும் வண்டல் மண் ஆகியவை நேபாள-திபெத் எல்லையில் பாயும் லெண்டே கோலா (Lhende Khola) ஆற்றின் குறுகிய பள்ளத்தாக்கில் வந்து விழுந்தன.
இந்த இடிபாடுகள் ஆற்றின் குறுக்கே ஒரு பெரிய சுவர் போல அமைந்து, தண்ணீரைத் தடுத்து நிறுத்தி ஒரு தற்காலிக செயற்கை அணையை (Debris Dam) உருவாக்கியது.
3. அணை உடைப்பு (The Outburst):
இந்த செயற்கை அணையால் ஆற்றின் ஓட்டம் தடைபட்டதால், அந்த தற்காலிக அணையின் பின்னால்(உண்மையில் அது ஒரு வகையில் ஆழமான பகுதி) மிக வேகமாகத் தண்ணீர் தேங்கி, ஒரு தற்காலிக ஏரி உருவானது.
தண்ணீரின் அழுத்தம் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்த போது, அந்த பலவீனமான மண் மற்றும் பனி அணை திடீரென உடைந்து சிதறியது.
கூடவே இந்த பனிப்பாறை உருகி 140,000,000, 000 கோடி லீற்றர் அளவிற்கான நீரையும் உருவாக்கியது.
இரணைமடு குளத்தின் முழுமையான நிரம்பிய நிலை கொள்ளளவு 148 மில்லியன் கன மீட்டர் (148 MCM) ஆகும். 148,000,000,000 liters. இந்த அளவுடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்தால் தீடீரென ஏற்பட்ட நீரின் தொகை அளவை கணக்கிட முடியும்
4. 30 நிமிடங்களில் பேரழிவு (The Massive Water Surge):
அணை உடைந்த சில நிமிடங்களிலேயே, தேங்கியிருந்த ஒட்டுமொத்த நீரும் சேறு, சகதி மற்றும் பாறைகளுடன் பெரும் ஆற்றலுடன் கீழ்நோக்கிச் சரிவாக சீறிப்பாய்ந்தது.
இந்த நீர் லெண்டே கோலாவில் இருந்து போட்டே கோஸி (Bhote Koshi) மற்றும் திரிசூலி (Trishuli) ஆற்றில் பாய்ந்தது.
இவையெல்லாம் வெறும் 30 நிமிடங்களில் ஆற்றின் நீர்மட்டம் 30 அடி வரை உயரத்திற்கு இராட்சத அலையாக உருவெடுத்து உயர வைத்தது
5. முன் எச்சரிகை வழங்காத புதிய அனர்த்தம்
முன் எச்சரிக்கை இல்லாத நிலையில் கிராமங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிவு எந்தவொரு மழைப்பொழிவோ, புயல் எச்சரிக்கையோ இல்லாததால் ஆற்றங்கரையில் இருந்த மக்களுக்குத் தப்பிக்க ஒரு நிமிடம் கூட அவகாசம் கிடைக்கவில்லை.
இந் நிகழ்வு நடைபெறும் போது அங்கு வாழும் மக்கள் தமது தோட்ட வேலைகளை போன்ற அன்றாட விடயங்களை முடித்து இரவு வீட்டிற்கு திரும்பி ஓய்வெடுக்கும் நேரம் ஆகும்
இந்த இராட்சத நீர் அலை, எல்லையில் இருந்த சீன எல்லைக் கட்டுப்பாட்டு அலுவலகம், ரசுவா (Rasuwa) மாவட்டத்தின் முக்கிய சந்தைப் பகுதிகள், பாலங்கள்(15 வரையிலானவை), சாலைகள்(40 கிலோ மீற்றர் வரையிலான) மற்றும் நீர்மின் நிலையங்களை( 8 வரையிலான) நொடிப் பொழுதில் அடித்துச் சென்றது.
இப்படி பனிப்பாறை உடைந்து, ஆற்றை அடைத்து, பின்னர் அணை உடைந்ததே (Glacial Lake Outburst Flood – GLOF) இந்த திடீர் பேரழிவிற்கான நேரடி காரணமாகும்.
மேலும் தெளிவுகள் பெறுவதற்கு மலைகள் பற்றிய தகவல்களை அறிவது தேவையாகின்றது அதனால் அதனை இத்துடன் இணைக்கின்றேன்
பல்வேறு வகையான மலைகள்
உலகில் வேறு வேறு வகையான மலைகள் உண்டா…? ஆமாம், புவியியல் ரீதியாக மலைகள் அவை உருவான விதம் மற்றும் புவித் தகடுகளின் (Tectonic Plates) நகர்வுகளின் அடிப்படையில் நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
அவையாவன…
1. மடிப்பு மலைகள் (Fold Mountains):
பூமியின் இரண்டு பெரிய புவித்தட்டுகள் (Tectonic Plates) ஒன்றை ஒன்று நோக்கி நகர்ந்து, மோதிக்கொள்ளும் போது ஏற்படும் கடுமையான அழுத்தத்தால், நிலப்பரப்பு மேல்நோக்கி மடிந்து இவ்வகை மலைகள் உருவாகின்றன.
இவை உலகின் மிக உயரமான, கூர்மையான மற்றும் நீளமான மலைத்தொடர்கள் ஆகும். இவற்றின் வயது குறைவானது ஆகும்.
உதாரணங்களாக…..
நாம் பேசிக்கொண்டிருக்கும் இமயமலை (Himalayas) (இந்தியத் தட்டும் ஆசியத் தட்டும் மோதியதால் உருவானது).
ஐரோப்பாவில் உள்ள ஆல்ப்ஸ் (Alps) மலைத்தொடர்.
2. எரிமலைகள் (Volcanic Mountains)பூமியின் ஆழத்தில் இருக்கும் உருகிய பாறைக்குழம்பு (Magma), பூமியின் மேலோட்டில் உள்ள துவாரங்கள் வழியாக லாவாவாக (Lava) வெளியேறி, குளிர்ந்து, பல அடுக்குளாக படிந்து மலை வடிவை எடுக்கிறது.
இவை கூம்பு (Cone) வடிவில் காட்சியளிக்கும்.
உதாரணங்களாக…
ஜப்பானில் உள்ள புஜி மலை (Mount Fuji).
ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ (Mount Kilimanjaro).
3. பீடபூமி மலைகள் / எஞ்சிய மலைகள் (Plateau / Erosion Mountains):
பல மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தட்டையான பீடபூமிகளாக (Erosion) இருந்த நிலப்பகுதிகள், ஆறுகள், காற்று மற்றும் பனிப்பாறைகளின் தொடர் அரிப்பினால் (நுசழளழைn) ஆழமான பள்ளத்தாக்குகளாக மாறி, எஞ்சியிருக்கும் உயரமான பகுதிகள் மலைகளாக காட்சியளிக்கின்றன. இவற்றின் வயது மிக அதிகம் ஆகும்.
இவற்றின் உச்சிப் பகுதி கூர்மையாக இல்லாமல், சமதளமாக (Flat-topped) இருக்கும்.
உதாரணங்களாக….
இந்தியாவின் அரவல்லி (Aravalli) மற்றும் மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகள் (Eastern Ghats). இந்த மலைகள் பூமியில் உயரினங்கள் தோன்றுவதற்கு முன்பே உருவான மலையாக அதிகம் வயது முதிர்ந்த உறுதியான மலையாகும்
இலங்கையில் உள்ள மலைகளும் இந்த வகையானவை
4. தொகுதி மலைகள் / பிளவுக் குன்று மலைகள் (Block Mountains):
பூமியின் மேலோட்டில் ஏற்படும் விரிசல்கள் அல்லது பிளவுகள் (Faults) காரணமாக, ஒரு பெரிய நிலப்பரப்பு செங்குத்தாக மேல்நோக்கி உயர்த்தப்படும்போது அல்லது சுற்றியுள்ள நிலப்பரப்பு கீழ்நோக்கித் தாழும்போது இவை உருவாகின்றன.
மேலே உயர்த்தப்பட்ட பகுதி ‘ஹார்ஸ்ட்’ (Horst) என்றும், கீழே தாழ்ந்த பகுதி ‘கிராபென்’ (Graben) என்றும் அழைக்கப்படும்.
உதாரணங்களாக….
ஜெர்மனியின் பிளாக் ஃபாரஸ்ட் (Black Forest) மலைகள்.
இந்தியாவின் சாத்புரா மற்றும் விந்திய மலைத்தொடர்கள் (Satpura & Vindhya).
இளமையான மலைகள் இது தம்மிடையே அதிக இறுக்கமான கட்டுமானப் பிணைப்பை கொண்டிராத இளகு தன்மை உடையவை இதனை அதே காபன் மூலகத்தின் உதாரணத்தால் விளக்க முடியும். காபனால் உருவான பென்சிற் கரியிற்கு இதனை ஒப்பிடலாம் இவற்றின் பிணைப்பு அவ்வளவு உறுதியானது அல்ல.
இமைய மலை இவ்வாறு இளமையான மலைதான் பல ஆயிரம் வருடங்கள் மட்டுமான வயதுடையவை.
இலகுவில் உடையும் உதிரும் தன்மை உடையவை
இமைய மலையை வளரும் மலை என்றும் ஆய்வாரள்கள் கூறுகின்றனர்.
வருடத்திற்கு 4 மில்லி மீற்றர் வரை இது வளர்ந்து கொண்டே இருக்கின்றது.
இந்த இளகு நிலை மலையில்தான் இந்த பனி உருகி கட்டியாக பாறையாக செங்குத்தாக வீழ்துள்ளது
இந்த இளமலையில் அதிகம் செங்குத்தான் பாகங்களே இருக்கும் சீரான ஏற்ற இறக்கங்கள் இந்த மலையில் குறைவாக காணப்படும்.
பீட பூமி மலைகள் காபன் மூலகத்தினால் உருவான வைரம் போன்ற உறுதியானவை.
இரு மலைகளும் அடிப்படையில் ஒரே மூலப் பொருட்களைக் கொண்டிருந்தாலும் ஒன்று இளகு நிலையிலும் மற்றது எக்கு நிலையிலும் காணப்படும்
இமைய மலையின் செயற்பாடுகளை எவ்வாறு ஒழுங்கமைக்க முடியும்…..
இந்தியா நேபாளம் சீனா பூட்டான் திபேத் (இது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி) இந்த நான்கு நாடுளும் இணைந்து செயற்பட்டால்தான் இமைய மலையில் எற்படும் இது போன்ற அனர்தங்களில் இருந்த தப்பிக் முடியும்
பூமி வெப்பமாதல் என்பது உலகத்திற்கான பொது விடயம் என்றாலும் இமைய மலையில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதை இந்த நான்கு நாடுகளும் கூட்டாக அவதானித்துக் கொண்டு இருக்கின்றன
இவர்களுக்கிடையேயான இறுக்கமான தகவல் பரிமாற்றம் முன் எச்சரிக்கையாக மக்களை இடம்பெயர்வைத்து அனர்தங்களில் இருந்து அழிவுகளில் இருந்து ஓரளவு தற்காத்து கொள்ள முடியும்
இம் முறை ஏற்பட்ட இந்த பனிமலை உருகி 4000 அடி வீழ்வதற்குரிய சூழல் ஏற்படுவதை சீனா தனது கமாரா தொழில் நுட்பத்தால் சில மணி நேரத்திற்கு முன்பு அறிந்திருப்பதாகவும் அதனை உரிய நேரத்தில் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கவில்லை என்ற குற்றச் சாட்டும் உண்டு.
கூடவே இமைய மலையை மேற்கு, கிழக்கு, உச்சி என்றாக மூன்றாக பிரித்தால் மேற்குப் பகுதியல் அமைந்த தீபேத்து சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இப்பகுதியில் சீனா மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளில் மலைகளை குடைய பாவிக்கப்படும் வெடியினால் ஏற்படும் அதிர்வும் இந்த பனிபாறை உடைவதற்கு காரணமாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.
கங்கை ஜமுனா பிரமபுத்திரா நதிகளின் ஊற்றுங்காலும் இதே இமைய மலைதான். எனவே இமைய மலையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு இந்த நதிகள் பாயும் அனைத்து இடங்களிலும் அளவு ரீதியில் வேறுபட்டாலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதில் சீனா இமைய மலையின் மேட்டுப்பகுதியல் அமைந்திருப்பதினால் இந்தியா நெபாளம் அளவிற்கு இந்த பனிபாறைகள் உருகுவதினால் ஏற்படும் வெள்ளப் பெருக்கு பாதப்பில் அளவு ரீதியில் குறைவான தாக்கத்தையே கொண்டிருக்கின்றது
இயற்கை எப்போது விழித்துக் கொண்டுதான் இருக்கின்றது. மனிதன்தான் விழிப்படைகின்றான் தூக்கத்தில் இருந்து…? இப்படியான அனர்த்தங்கள் நடைபெறும் போது…