கன்னங்கராவை நாம் இலவசக் கல்வியின் தந்தை எனலாம்.
‘மாதா.. பிதா… குரு…. தெய்வம்…..’ என்பதை மாற்றி அமைக்கும் ஆசிரியர் முதன்மை பெற்றதாக பயணிப்பதே பயணித்ததே இலங்கையின் கல்விச் சூழல்.
பாலர் பாடசாலையில் இருந்து பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வியை முழுமையாக வழங்கும் ஒரு நாடாக மூன்றாம் உலக நாடாக இலங்கை இருப்பது சிறப்பு.
இதில் மாணவ வாழ்க்கைச் செலவுகளையும் இலகு கடனாக…? ஓரளவு வழங்கும் முறமையும் இதற்குள் அடக்கம்.
அதிலும் பல்வேறு பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் ஆயுதப் போராட்டம் கிளர்ச்சிகள் என்று ஏதும் இலங்கையில் நடைபெற்றாலும் பாதிப்புகள் சிலவற்றை முகம் கொடுத்து கல்வியைத் நிறுத்தாது தொடர்ந்த வரலாற்றை நாம் அறிவோம்.
சகல துறைகளுக்குமாக பட்டப் படிப்பு, முதுமானிக் கற்கை என்பதாக இலவசக் கல்வியை முடிந்த அளவிற்கு நாட்டு மக்களுக்கு வழங்கி வரும் கல்வி அமைப்பு.
இலங்கையிற்கான இந்த முறமையில் பாகுபடுத்தல் என்பதாக மொழி இன அடிப்படையிலான பிரச்சனைகள் பாதிப்புகளை ஏற்படுத்தின என்பதுவும் உண்மை.
வளங்களை அடிப்படையாக கொண்ட பின் தங்கிய பிரதேசம் என்ற விடயத்திற்கும் பொறுத்தவரையிலும் இது பொருந்துகின்றது.
தொழிற் துறை சார்ந்த கல்வி முறமையும் அதற்கான பயிற்சிகளைப் பெறுவதற்குரிய தொழிற்சாலைகள் ஆய்வு கூடங்கள் அதிகம் இல்லாததும் இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
மலையகப் பிள்ளைகளுக்கான கல்வி நீண்ட காலமாக கேள்விக்குறியாகவும் முழுமையை நோக்கி அதிகம் நகராத தன்மைகளை உடைத்து…? தற்போது திருப்த்திபடும் அளவிற்கான முற்னேற்களை கண்டிருபபது மிகவும் பாராட்டிற்குரியது… அவதானிப்பிற்கும் உரியது.
பின் தங்கிய பிரதேசங்களின் வளங்களை அதிகரித்து ஏற்றத்தாழ்வு அற்ற கல்வி வழங்கலை அடைவதற்கு இன்னும் நிறையவே பயணப்பட வேண்டும்.
இதில் அரசின் செயற்பாடுகளுக்கு அப்பால் ஆசிரியர்கள் சமூகம் போன்றவர்களின் சாத்தியமான பங்களிப்பு ‘தியாகங்கள்’ இங்கு அதிகம் தேவைப்படுகின்றது.
எமது கல்வி அமைச்சர்… பிரதம மந்திரி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சாக பொறுப்பெடுத்த பின்பு 2026 ஆண்டில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையினால் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு கடுமையான உழைப்பை செய்து வருகின்றார்.
இவற்றை நாம் செய்திகளில் அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது.
அதுவும் சிறப்பாக க.பொ.த சாதாரணதரம், க.பொ.த உயர்தரம் என்ற இரு நிலைத் தாண்டல்களின் பின்பு பல்கலைக் கழகத்தை நோக்கி நகர்வதற்குரிய எல்லைகளை தொடாதவர்கள் அத்துடன் கல்வி வேலை வாய்புகளை அதிகம் பெறுவதற்கான கல்வி முறமை இலங்கையில் தற்போது இல்லை.
இதன மாற்றி அமைத்து இவர்களுக்கும் தமக்கான வேறு வகையிலான கல்வி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதான புதிய கல்விக் கொள்கைகளை சீர் திருத்தமாக செய்வதாக அவர் கவனச் செலுத்தி செயற்படுவது மிகவும் சிறப்பானது.
புதிய கல்விக் கொள்கை பற்றி எமது ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கா பாராளுமன்றத்தில் ஆற்றி உரைகள் நிச்சயம் கவனத்தை பெறும் ஆரோக்கியமான பார்வை தான்.
அவரின் கூற்றுப்படி…
“பாடசாலையொன்று திறக்கப்பட்டால் சிறைச்சாலை ஒன்று மூடப்படும்” என்பது பிரான்ஸ் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான விக்டர் ஹியுகோவின் பிரபலமான கூற்றாகும்.
இந்தக் கூற்று உணர்த்துவது ஒரு நாட்டிற்கு பாடசாலைக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையாகும்.
தரம் 13 வரை கல்வி முக்கியமானது என்பதுடன், பாடசாலையில் இருந்து எந்தவொரு குழந்தையும் இடைவிலகக் கூடாது.
98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்குக் குறைவு, 20 மாணவர்களுக்குக் குறைவான பாடசாலை 406 உள்ளன. 30 மாணவர்களுக்குக் குறைவான பாடசாலை 752 உம் உள்ளன.
அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141 என்றும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும்.
நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 உள்ளன.
குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும் பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.
சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்கவேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறான சில பாடசாலைகளில் முன்னெடுக்கவேண்டிய எவ்விதமான இதர செயற்பாடுகளும் இடம்பெறுவதில்லை.
விளையாட்டுப்போட்டி, பாடசாலை சுற்றுலா, ஏனைய போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், வெற்றி, தோல்விகளில் பங்கேற்றல் எவையும் இடம்பெறுவதில்லை இதிலிருந்து பாசாலைகள் மாறவேண்டும்.
சில பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை விளையாட விடுவதில்லை. சமூகத்தில் நடைபெறும், நல்லது அல்லது சோகமான சம்பவங்களில் பங்கேற்பதில்லை.
விளையாடுவதற்குச் சென்றால், வீட்டுக்கு சாப்பாட்டுக்கு வரவேண்டாமென எச்சரிக்கின்றனர். நண்பர்களுடன் சேர விடுவதில்லை.
அக்கம் பக்கத்து வீடுகளில் மரண வீடுகள் இடம்பெற்றால், தங்களுடைய சொந்தக்காரர் வீட்டுக்குப் பிள்ளைகளை அனுப்பிவிடுகின்றனர்.
இவையெல்லாம் தவறான நடைமுறையாகும். தங்களுடைய பிள்ளைகள் பொறியியலாளர்கள், வைத்தியர்கள், கணக்காய்வாளர்கள், சட்டத்தரணிகள் இல்லையேல் சமூகத்தில் உயர்பதவிகளில் மட்டுமே இருக்கவேண்டும் என நினைப்பதும் தவறானது.
இவ்வாறு பல விடயங்களை புள்ளி விபரங்களுடன் முன்வைத்ததும் சிறப்பு.
கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வியுடன் எவ்வாறான பிணைப்பில் உள்ளனர்.
நாட்டில் இருக்கும் பாடசாலைகளின் நிலைமை என்ன? எத்தனை மாணவர்களுக்கு எத்தனை ஆசிரியர்கள் இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இதற்கும் அப்பால் பாலியல் கல்வி, போதைப் பொருள் பற்றி விழிப்புணர்வு, கல்விப் பாடத் திட்டத்தில் இனங்களுக்கிடையேயான சகோதரத்தும் சமத்துவத்தை கல்வியிற்குள் போதிக்க வேண்டும்.
சுற்றுச் சூழல் பற்றி விழிப்புணர்வுடன் இலங்கை அரசியல் யாப்பு பற்றி புரிதலை ஏற்படுத்தும் கல்வியும் இதில் இணைக்கப்பட வேண்டும் என்பனவற்றை எனது அவதானிப்பாக முன்வைக்கின்றேன்.
இலவசக் கல்வியைப் பெற்று பட்டம் முதுமானிப் பட்டம் என்றாக உயர்ந்தவர்கள் வெறும் தமது சுய இலாபங்கள் முன்னேற்றங்கள் அடிப்படையில் தாம் பெற்ற கல்வி அறிவை தனது தாய் நாட்டிற்கு இலவசக் கல்வியை வழங்கிய நாட்டிற்கு வழங்காது…? மேற்குலக நாட்களின் மேம்பாட்டிற்காக தமது வாழ்க்கையை உயர்த்தும் டாலர்களை தேடிய ஓட்டத்திற்கான நிறுத்தங்களை அரசு ஏற்படுத்தியாக வேண்டும்.
இதற்கான சூழலை அரசு இலங்கையிலும் தங்கியிருந்து நாம் வாழ முடியும் சமத்துவமாக சகோதரத்துவமாக போதியளவு வாழ்க்கைச் செயலவுகளை சமாளிக்கும் பொருளாதாரக் கட்டுமானத்திற்கு வாழலாம் என்பது உறுதிப்படுப்பட வேண்டும்.
இவற்றிற்கு அப்பல் இலவசக் கல்வி பெற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சில சட்டக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.
ஏற்கனவே யுத்தம் பொருளாதாரக் காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறி இந்த இலவசக் கல்விப் பயனாளர்கள் நாட்டிற்கு திரும்பி நாட்டிற்கான பங்களிப்புடன் தமது சுபீட்சமான வாழ்வை தொடர்வதற்குரிய வாய்ப்புகள் புரிதல் களை உருவாக்குவது எவ்வாறு என்ற விடயமும் இந்த புதிய கல்வி சீர்திருததக் கொள்கையிற்குள் நிச்சயம் இணைகப்பட வேண்டும்.
நம்பிக்கையுடன் 2026 ம் ஆண்டு அறிமுகப்படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர் கொள்வோம்.
இதனை அறிவு ஜீவிகள் ஆசிரியர்கள் பெற்றோர் மாணவர்கள் என்று சகலரும் பேதமின்றி இணைந்தும் செயற்படுவோம்.