ஆனால் இன்று அதே அமெரிக்காவில் இத் தினத்தை அவர்கள் தொழிலாளர் பொதுத் தினமாக போராட்ட தினமாக அனு|;டிப்பது இல்லை என்பதுதான் வேடிக்கையானது.
இதற்கும் அப்பால் அன்று போராடிப் பெற்ற உரிமைகள் தொழிலாளர்களின் அதி உச்ச சுரண்டலாகவும் இன்று இதே அமெரிக்காவில்தான் நடைபெறுகின்றது.
1886ஆம் ஆண்டு சிக்காகோ நகரில் ஹே மார்க்கெட்டில் எட்டு மணி நேர வேலைக்காகப் போராடிய தொழிலாளர் மீது ஏவப்பட்ட வன்முறையில் கொல்லப்பட்ட தொழிலாளிகளின் குருதியில் தோய்ந்ததுதான் மேதினம்.
சம்பள உயர்வுக்காகவும் சங்கம் வைக்கும் உரிமைக்காகவும் அமெரிக்கத் தொழிலாளர்கள் போராடி வந்தாலும் கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் எழுதியது போல அமெரிக்காவில் பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பகுதியான கறுப்பு இனத் தொழிலாளி அடிமையாக நீடிக்கும் வரை வெள்ளை தொழிலாளியின் வாழ்க்கையிலும் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அன்று அமெரிக்காவின் உள் நாட்டுப் போருக்குப் பின் அடிமைத்தனத்தின் அழிவிலிருந்து புதிய உத்வேகம் பிறந்தது. எட்டு மணி நேர வேலைக்கான போராட்டம் வெடித்தது. சர்வதேசத் தொழிலாளர் காங்கிரசும் எட்டுமணி நேர வேலைக்கான கோரிக்கைக்காகப் போராட உலகத்தொழிலாளிகளுக்கு அறைகூவல் விடுத்தது.
இது ஒரு இயக்கமாகி அதிவேகத்துடன் அட்லாண்டிக் முதல் பசுபிக் வரையிலும் நியூ இங்கிலாந்து முதல் கலிபோர்னியா வரையிலும் பரவியது.
மே தினத்தை ஒரு ஆர்ப்பாட்ட, போராட்ட தினமாக ரஸ்ய தொழிலாளர்களுக்கு லெனின் தன்னுடைய ஆரம்பகால ரஸ்ய புரட்சி இயக்க நடவடிக்கையின் போதே அறியச் செய்தார்.
இதுவே மேதினம் வலுப்பெறுவதற்கும் அதிகம் காரணமாயிற்கு.
மே தின நிகழ்ச்சியில் பங்கு கொள்வது எத்தனை பேர் என்பது முக்கியமல்ல. பங்கு கொள்பவர்கள் வெளிக்காட்டும் ஸ்தாபன கட்டுப்பாட்டு உணர்வும், வர்க்க உணர்வும், உழைக்கும் மக்களின் அரசியல் விடுதலைக்கான ஒடுக்க முடியாத போராட்டத்திற்கு அவர்கள் காட்டும் உறுதியும்தான் முக்கியமானது.
இதன் விளைவாக பாட்டாளி வர்க்க வளர்ச்சிக்கான சூழ் நிலையும், சந்தர்ப்பமும், சமத்துவதற்கான வெளிப்படையான போராட்டமும் வளரும்.
எட்டு மணி நேர வேலைதான் இந்த முதல் கோரிக்கையானது உலகெங்கிலுமுள்ள பாட்டாளி மக்கள் வைத்துள்ள பொதுவான கோரிக்கையாகும்.
ஆனால் அது காலப் போக்கில் மனிதனின் உடல் வல்லமை சமூக வாழ்க்கையின் அடிப்படையில் எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர பொழுது போக்கு, எட்டு மணி நேர ஓய்வு என்றாக சமூக விஞ்ஞானமாக அது பரிணாமம் அடைந்து.
ஆனால் இன்று ஐந்து நாட்கள் வேலை இரு நாட்கள் முழுமையாக குடும்பத்துடனான இணைவு மகிழ்வு என்று எல்லாவற்றையும் தொலைத்து கட்டுப்பாடற்ற ஓட்டமாக மனித வாழ்வு வந்து நிற்கின்றது.
இந்தியா போன்ற நாடுகளில் நாளுக்கு பத்து மணித்தியாலயம் வாரத்தில் ஆறு நாட்கள் என்று வேலை இயல்பாகி இயந்திரமயமாகியும் விட்டது.
இது சரிதானா என்றால் இல்லை என்பதே சரியான பதில்.
ஐந்து நாட்கள் வேலை. நாள் ஒன்றிற்கு எட்டு மணி நேர வேலை இதற்குள் வரும் வருமானம் குடும்பத்தை அது சார்ந்த வாழ்க்கையை கொண்டு செல்வதாக உறுதிப்படுத்தப்படும் வரை இந்த மே தினங்கள் போராட்ட தினங்களாகவே தொடர முடியும்.
இதற்குப் பின்னாலும் போராட வேண்டி சில கூறுகளும் உண்டு.
அது திறமைக்கேற்ற வேலை தேவைக் கேற்ற ஊதியம் என்றான வளர்ச்சியை அடையும் வரை.
நாடுகளில் புதிய அரசுகள் அமையும் போதெல்லாம், பல் தேசியக் கம்பனிகள் எல்லாம் தமது நிதி பற்றாக ;குறை என்று வரும் காலங்களில் முதலில் கை வைப்பது வேலையாட்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அவர்களுக்கான உரிமைகளை இல்லாது செய்வதுதான்.
அதிலும் பிரதானமாக ஊதியத்தில் கை வைப்பதாகவே தம்மை நகர்த்துகின்றனர்.
இந்த அரசுகளும், பல் தேசியக் கம்பனிகளின் உயிர ;நாடிகளாக இந்த உழைப்பாளர்களின் உழைப்பு இருந்தாலும் முதல் பலியாக இவர்களையே அவர்கள் பலியிடுகின்றனர்.
இலங்கையில் முதன்மைத் தொழிலாளர்களாக இருக்கும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளம் அரசுகள் மாறி மாறி வந்தாலும் இது வரை நியாயமான தீர்வை அடைய முடியவில்லை.
இதில் அடையும் நியாயமான தீர்வுதான் இலங்கை போன்ற நாடுகள் பொருளாதாரப் பாய்ச்சல் என்றாகி வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கச் செய்யும்.
முறைசாரா தொழிலாளர்கள் என்று மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வாரத்தில் போதிய நாட்கள் வேலை என்றில்லாது கூலிகளாக பிறப்புடன் ஆரம்பித்து இறப்புடன் முடியும் வாழ்க்கையே அதிகம் அமைகின்றது.
ஒருவன் எட்டு மணி நேரம் வேலை செய்து அவனுக்கு தேவையான ஊதியத்தை பெறும் வகையிலான உழைப்பாளர் பொறிமுறையை ஒரு நாடு ஏற்படுத்தி முடிக்காதவரை இந்த மே தினங்கள் போராட்ட தினமாக தொடரும் தொடர வேண்டிய சூழலே தொழிலாளர்களுக்கு இருக்கும்.
இதற்கான அறை கூவல் துறைகள் வேறுபட்டாலும்… ஊதிய அளவு வேறபட்டாலும்… நாடுகள், இனம், மதம், மொழி, சமூகம் என்று எந்த வேறுபாடுகளையும் தவிர்த்து உழைப்பாளர்களாக இந்த தொழிலாளர் தினத்தை போராட்ட தினமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் தினமாக நாம் நிர்ணயம் செய்து கொள்வோம்.
இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலை, விவசாயம் தொழிலாளர்களின் வேலைகளை பறித்து போல் இல்லாது செயற்கை நுண்ணறிவு இதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள் வேண்டும்.
இதற்கு முதலாளித்துவம் அனுமதி கொடுக்க மறுத்தாலும் அதன் அடிவருடிகள் எலோன் மக்ஸ் அசயற்பட்டாலும் எமது போராட்த்தை நாம் நிறுத்தக் கூடாது.
புதிதாக உதித்து வரும் செயற்கை நுண் அறிவு மனித குலத்தின் வேலை வாய்ப்புகளை பறிப்பதற்கு பதிலாக வேலை; நேரக் குறைப்பை என்ற விஞ்ஞான அறிவியல் முன்னேற்றத்தை எல்லோருக்கும் சமனாக பகிர்ந்து அதே வேளை அவர்களின் ஊதியத்தை அதே அளவில் பேணுவதற்குரிய பொறி முறையை உருவாக்க பயன்பட வேண்டும்.
இது திறமைக்கேற்ற வேலை தேவைகேற்ற ஊதியத்தை உறுதி செய்யப் பயன்படுமாயின் அந்த விஞ்ஞான வளர்ச்சி உண்மையில் மனித குல வளர்சியிற்கு பயனுள்ளதாக நியாயமானதாக அமையும்.
மாறாக மனிதனை ஏதுமற்றவனாக்கும் வருமானக்குறைப்பு என்றும், பணிக்குறைப்பு பணி நீக்கம் என்றும் புறப்பட்டால் கடதாசிப் பொருளாதாரம் உழைப்பாளர்களால் காற்றில் பறக்கவிடும் வரை போராட்டங்களால் நிரம்பி வழியும் என்று இந்த மேதினத்தில் உறுதிமொழி எடுப்போம்.