உயர்தர வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் என்றான சந்திப்புகளின் பின்பு ஈழவிடுதலைப் போராட்டத்தில் செயற்பாடுகளை கொண்டிருந்த தற்போது பிரதேச சபை உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜீவனின் சந்திப்பு ஏற்பாடாக தோழர் மு. சிவலிங்கத்தை அவரின் வீட்டில் பலருமாக இணைந்து உரையாடலை மேற்கொள்வதற்கு வாய்ப்புகளை ஏற்பட்டது.
எங்கள் உரையாடலில் ஆசிரியர் மாலினியும் இணைந்து இருந்தார்.
அப்போது மு. சிவிலிங்கம் அவர்களால் மிகவும் முதன்மையாக வைக்கப்பட்ட ஒரு கேள்வியாக ஈழவிடுதலைப் போரில் பல தியாகங்களை அதுவும் உயிர்த் தியாகங்களை செய்த மலைய இளைஞர்கள் பங்களிப்புகள்…. அர்பணிப்புகள்…. பொதுவெளியில் அதுவும் வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தினால் அதிகம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்பதாக இருந்தது
அவரின் ஆதங்கத்திற்கு பின்னால் உள்ள விடயங்களுக்கான மிக நீ;ண்ட பதில் ஒன்றை உரையாடலாக பதிலுரைத்தும் இருந்தேன்.
“ஈழ விடுதலைப் போரில் துப்பாக்கி காவியவர்களில் பலரையும் ‘இயக்கம்’ வெறும் ‘சிப்பாய்’ என்றாக கையாண்டதன் வெளிப்பாடுகளையும் உணர்த்தியும் இருந்தேன்.
உண்மையான போராளிகளாக செயற்பட்ட அவர்கள் சிப்பாய்களைப் போலவே பல வேளைகளில் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு முரணான யதார்த்த நிலையை தெளிவும் படுத்தினேன்.
எனது பதிலில் அவருக்கு ஏற்பட்ட ஏற்புடமையை அவர் என்னிடம் பகிர்ந்தும் இருந்தார்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற உரையாடலின் பின்பு அவரிடம் இருந்து விடை பெற்ற போது வீட்டு வாசல் வரை மட்டும் அல்ல அந்த சிறிய ஒழுங்கை முழுவதும் என்னோடு நடந்து வந்து வீதியில் வைத்து என்னை… எம்மை…. வழியனுப்பி வைத்த அந்த தோழமை நிகழ்வுதான் என் மனதில் வந்து போகின்றது தற்போது.
நான் மலையகத்திற்கு வர இருபபதாக மல்லிகைப்பூ திலகர் இந்தியால் நின்றபடி தனக்கு அறியத் தந்ததையும் நினைவு கூர்ந்தார்.
என்னோடு எடுத்துச் சென்ற எனது புத்தகம் ஒன்றையும் அவர் பார்வையிற்கு முன்வைத்து வைத்தேன்.
அவருடனான உரையாடலின் போது அவர் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய செயற்பாடுகள் வாழ் நாள் சாதனையாகவே என்னால் உணரப்பட்டது.
அது இன்று செயற்பாடாக ‘சிவாமுதம்’ என்ற விழாச் சிறப்பிதழ் வெளியீட்டுடன் சிறப்பு நிகழ்வாக மலையகத்தில் நடைபெற உள்து அளவற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயலாக உணரப்படுகின்றது.
விழா மலரில் எமது எழுத்தாக்கமும் இணைக்கப்பட்டிருக்காவிட்டாலும் உணர்வால் அதனுடன் நாமும் இணைவதான உணர்வுகளை தரும் நிகழ்வாகவும் இதனை உணர்கின்றேன்.
வாழ்த்துகள் தோழர் மு. சிவலிங்கம் அவர்களுக்கு