மாணவர்கள், தொழிலாளர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இச்சேவை பெரும் நன்மையாக அமையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இனி கல்வி, தொழில், சுகாதாரம் மற்றும் அன்றாட தேவைகளுக்கான பயணங்கள் மேலும் இலகுவாகவும் பாதுகாப்பாகவும் அமையவுள்ளன. தீவுப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இந்த சேவை பார்க்கப்படுகிறது.
மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றிற்கு நடைமுறை தீர்வுகளை வழங்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பணிகளுக்கு அனலைதீவு மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
“மக்களின் தேவைகளே எமது முன்னுரிமை” என்ற உறுதியுடன், நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் சமமான சேவைகளையும் அபிவிருத்தியையும் கொண்டு செல்ல தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.