அரைக்காலறை ஆடை அனுமதி: பெண்களிடையே புதிய எதிர்ப்பு

ஆளுநர் யுரிகோ கொய்கே (Yuriko Koike) அறிமுகப்படுத்திய இந்த இலகு ஆடை அறிவிப்பு, டோக்கியோ கூல் பிஸ்’ (Tokyo Cool Biz) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் அரைக்காலுறைகளுடன் (Shorts) பணிக்கு வர முடியும் என்பதுடன், இது குறித்து பல இளம் அரசு ஊழியர்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் விளக்கிய ஆளுநர் யுரிகோ கொய்கே, “வழக்கத்தை விடவும் இம்முறை கோடைகாலம் மிகவும் வெப்பமாக உள்ளது. வழக்கமாக டோக்கியோ நகரில் ஆண் அரசு ஊழியர்கள் டை, கோட் அணிந்தே பணிக்கு வருகை தருகின்றனர். புதிய திட்டத்தின் கீழ் அவர்கள் அரைக்காலுறைகளுடன் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஆண் ஊழியர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்; அரைக்காலுறைகளுடன் பணிக்கு வாருங்கள், அது உங்களுக்கு வசதியாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஆண்கள் அரைக்காலுறைகளுடன் பணிக்கு வருவத குறித்து சில இளம் பெண்களும் பெண்களும் தங்களது விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ளனர். சில ஆண்களின் கால்களில் உள்ள ரோமங்களைப் பார்ப்பது தங்களுக்கு ‘மனரீதியான அசௌகரியத்தை/அமைதியின்மையை’ ஏற்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆண்களின் கால்களில் உள்ள ரோமங்களைப் பார்ப்பது சில பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதை ஜப்பானிய உளவியலாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ரோமங்களைப் பார்ப்பதால் ஏற்படும் இந்த அசௌகரியத்தை ஜப்பானிய மனநல மருத்துவர்கள் ‘சுனெஹாரா’ (Sunehara) என்ற ஜப்பானியச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். இதன் எளிய பொருள் ‘கால்களில் உள்ள ரோமங்களால் ஏற்படும் மன உளைச்சல்/இம்சைக் காரணி’ என்பதாகும். இந்த ‘சுனெஹாரா’ என்ற சொல் தற்போது இணையத்திலும் டிரெண்டாகி வருகிறது.

Leave a Reply