அலெப்போவில் அமெரிக்க படைகள்

அலெப்போவில் அமெரிக்க இராணுவ வீரர்கள் கடந்த ஐந்தாண்டுகளாக செயற்பட்டு வந்துள்ளனர். இதை எனக்கு ஏற்கனவே ஒருவர் உறுதிப் படுத்தி இருந்தார். அமெரிக்காவில் வாழும் வெள்ளையின அமெரிக்கப் பெண் ஒருவருடன் இணையத்தில் அரட்டை அடித்த நேரம் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருந்தார். அமெரிக்க இராணுவ வீரரான அவரது கணவர், ஐந்து வருடங்களுக்கு முன்னர் சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டதாக கூறினார். அந்த இடமும் அலெப்போ தான். அப்போது இந்தத் தகவல் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், சிரியாவின் உள்ளே தனது படைகள் இருப்பதாக, அமெரிக்க அரசு எந்தக் காலத்திலும் ஒத்துக் கொள்ளவில்லை. அமெரிக்க அரசு இப்படி எத்தனை இரகசியங்களை தனது மக்களுக்கு மறைத்திருக்கும்?

(Kalai Marx)