இத்தாலியில் அதிர்ந்தன மலைப்பகுதிகள்: 120 பேர் பலி

இத்தாலியில் மலைப்பகுதிகள் நிறைந்துகாணப்படும் மத்திய இத்தாலியில், இன்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக, குறைந்தது 120 பேர் பலியாகியுள்ளனர் அறிவிக்கப்படுகிறது . 6.2 றிக்டர் அளவில் ஏற்பட்ட பலமான இந்தப் பூமியதிர்ச்சி, கட்டடங்களைக் கீழே வீழ்த்தியிருந்தது.

உம்பிரியா பிராந்தியத்திலுள்ள நோர்ச்சா நகரத்துக்கு அண்மையில், இத்தாலி நேரப்படி அதிகாலை 3.36க்கு (இலங்கை நேரப்படி காலை 6:06), இந்தப் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தப் பூமியதிர்ச்சி காரணமாக, அக்கும்மொலி, அமட்ரீஸ், பொஸ்டா, அர்குவாட்டா டெல் ட்ரோன்டோ ஆகிய நகரங்கள் பாதிக்கப்பட்டதாக, இத்தாலியின் தீயணைப்புப் படை தெரிவித்தது. அக்கும்மொலியின் மேயரின் தகவலின்படி, ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.