இந் நிறுவனம் தனது செயல்பாடுகளை 2026 ஜூலை 07 முதல் ஆரம்பிக்கவுள்ளது. செயல்பாட்டு அணுகலை மேம்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பிலும் ஒரு ‘இந்திய துணைத் தூதரக விண்ணப்ப மையம்’ (ICAC) செயல்படவுள்ளது.
விசா, கடவுச்சீட்டு, ஓ.சி.ஐ மற்றும் பிற தூதரக சேவைகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க, விண்ணப்பதாரர்கள் www.icacsrilanka.com என்ற இணையத்தளத்தின் ஊடாக முன்னுரிமை நேரத்தை (Appointments) முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
2026 ஜூலை 07 முதல், அனைத்து விசா, கடவுச்சீட்டு, ஓ.சி.ஐ மற்றும் தூதரக ரீதியான விண்ணப்பங்களை பின்வரும் முகவரிகளில் சமர்ப்பிக்கலாம்:
கொழும்பு: இல. 536, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 08.
கண்டி: முதலாம் தளம், கட்டிடம் இல. 478/1/பி, வத்துவால, நுகவெல, ஹரிஸ்பத்துவ, கண்டி. யாழ்ப்பாணம்: இல. 43, ராக்கா வீதி, யாழ்ப்பாணம் – 40000.
அம்பாந்தோட்டை: சி.ஜி.எச்.டபிள்யூ (CGHW) நெடுஞ்சாலை, அம்பாந்தோட்டை.
மட்டக்களப்பு: இல. 25, லேக் வீதி 01, புளியந்தீவு (புளியந்தீவு மேற்கு 179ஏ), மட்டக்களப்பு. கொழும்பு,