இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை ?

உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில்  உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது.

மேலும்  ”பொருளாதாரத்  தடையை விதித்ததற்காக ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்ளத்  தயாரான இருப்பதாகவும், குறிப்பாக அமெரிக்காவிலுள்ள ரஷ்யாவின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் ” எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவிற்கு எஸ்- 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு, திட்டமிட்டபடி வழங்கப்படும் என ரஷ்யா நேற்றைய தினம் (02)   உறுதியளித்தது.

இதனால் ‘இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கலாமா? வேண்டாமா? ‘என அமெரிக்கா ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.