இந்தியாவின் 6ஆவது தேசியக் குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் பெறுபேறுகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வு, இந்திய உதவி உயர்ஸ்தானிகரகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்:
“2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், பல உள்ளூர் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, 2019ஆம் ஆண்டு முதல் உலகையே உலுக்கிய கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் மற்றும் 2022ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி போன்றவை இத்திட்டத்தின் பணிகளில் மந்தநிலையை ஏற்படுத்தின. இந்தப் பொருளாதாரப் பின்னடைவிலிருந்து நாடு மீண்டு வருவதற்கு 2023ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
எனவே, இத்திட்டத்தின் தாமதத்தை வெறும் காலதாமதமாக மட்டும் பார்க்காமல், அதனைச் சுற்றியிருந்த சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளின் பின்னணியிலேயே ஆராய வேண்டும். இவ்வாறான சவால்கள் காணப்பட்டபோதிலும், எமது அர்ப்பணிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த 10,000 வீடுகளையும் நாம் முழுமையாகக் கட்டி முடிப்பதில் உறுதியாக உள்ளோம்.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக அமைக்கப்பட்டு வரும் வீடுகளில், தற்போது 1,300 வீடுகளின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இது தவிர, கடந்த ஆண்டு ஜனாதிபதியினால் மேலும் 4,000 வீடுகளை அமைப்பதற்கான புதிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டிருந்தது. அந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட மற்றும் உரிய நடவடிக்கைகள் தற்போது மிகவும் துரித முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எந்தவொரு அபிவிருத்தி மற்றும் வீட்டு வசதித் திட்டமாக இருந்தாலும், அதனை நாம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்தே முன்னெடுப்போம். மலையக மக்களின் வாழ்வாதாரத்தையும் வீட்டுரிமையையும் உறுதி செய்யும் இந்தத் திட்டங்களை, மிக வெற்றிகரமாகவும் நேர்த்தியாகவும் முடிப்போம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.