இரண்டு கப்பல்களைக் கைப்பற்றிய ஐ. அமெரிக்கா

ரஷ்யக் கொடியுடனிருந்த மரினெராவை அது ஐஸ்லாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்குமிடைப்பட்ட கடற்பரப்பில் பயணித்த நிலையில் ஏறத்தாழ இரண்டு வாரங்கள் தேடிய பின்னர் ஐ. அமெரிக்க படைகள் தரையிறங்கியிருந்தன. இந்நடவடிக்கைக்கு பிரித்தானியா வான், கடல் பாதுகாப்பு வழங்கியிருந்தது.

தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக ஐ. அமெரிக்காவால் குற்றஞ்சாட்டப்பாட்ட எம்/டி சோபியா என்ற இரண்டாவது எண்ணெய்க் கப்பலில் கரீபினியனில் ஐ. அமெரிக்கப் படைகள் தரையிறங்கியுள்ளன.