இராணுவ பிரசன்னம் படிப்படியாக நீக்கப்படும்?! ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற பூசை விழாவின் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.  வட மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பில் ஆறு மாதங்களுக்குள் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதையும் வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிக்காட்டினார். சம்பந்தப்பட்ட தரப்புடன் பேசி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.  அதிகாரப் பகிர்விற்கு 13ஆம் திருத்தம் சிறந்த தீர்வு என்று கருத்துத் தெரிவித்த ரெஜினோல்ட் குரே அரசியலமைப்பின் பிரகாரமே தமக்கு கடமையாற்ற முடியும் என்று கூறியதுடன் அதற்கமைய 13ஐ பெறுவதில் உள்ள தடைகளை நீக்க முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.