கட்டாய உழைப்பின் (Forced labour) மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைகளை விதிக்கத் தவறிய அல்லது அந்தத் தடைகளைச் சரிவர நடைமுறைப்படுத்தத் தவறிய 60 பொருளாதார நாடுகளை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) இலக்கு வைத்துள்ளது. இந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரிகளை விதிக்க அது பரிந்துரைத்துள்ளது. இந்த 60 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.