இலங்கைக்கு 120 மில்லியன் அமெரிக்க டொலர்

வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன், மேற்கண்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்திருப்பதை சந்தோஷமளிக்கிறது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கும், 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய கடன் தொகையாக வழங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை ஆதரிக்க இந்த கடனை அமெரிக்கா வழங்கும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.