2025 ஆம் ஆண்டின் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 10,047 பாடசாலைகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பாடசாலைகளில் 3,065 பாடசாலைகளில் 10-க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
அப்பாடசாலைகளுள் ஒரு தேசிய பாடசாலையும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 1,645 அரச பாடசாலைகளில் 50 க்கும் குறைவான மாணவர்களே உள்ளதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது.