இலங்கை: கொரனா செய்திகள்

அறிகுறியற்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் பொறுப்புடன் செயற்படுவதற்கு, அடுத்த வாரம் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதாரத் துறை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உரையாற்றிய பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத், அடுத்த சில நாள்களில் பயணத்தை கட்டுப்படுத்தி, மக்கள் பொறுப்புடன் செற்;படுவது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.