இலங்கை: கொரனா செய்திகள்

அத்துடன் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இறப்பு எண்ணிக்கையில் 10 சதவீதம் அதிகரிப்பை அவதானிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பதிவான இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு முழுமையாக தடுப்பு செலுத்திக் கொள்ளாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய வைத்தியசாலையில் ஒட்சிஜன் தேவைப்படும் நோயாளிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஒக்சிஜன் தேவைப்படுகின்ற கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.

இவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை என  தேசிய வைத்தியசாலையின் டாக்டர் ஹர்ஷ சதீஸ்சந்திர தெரிவித்தார்.

மேலும், தற்போது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மொத்த 325 கொரோனா நோயாளர்களில் சில நோயாளிகள் ஒரு டோஸ் தடுப்பூசியை மட்டுமே பெற்றுள்ளனர்.

இதேவேளை, தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு நோயினால் கடுமையான சிக்கல்கள் உருவாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.