எபோலா வைரஸ் பரவல்: பலி எண்ணிக்கை 131 ஆக உயர்வு

இதுபற்றி, காங்கோ சுகாதாரத் துறை அமைச்சர் சாமுவேல் ரோஜர் கம்பா கூறுகையில், “513 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 131 பேர் தற்போது வரை பலியான நிலையில் அனைவரும் வைரஸ் தொற்று காரணமாக பலியாகியுள்ளனரா என்ற விசாரணை நடைபெற்று வருகின்றது.” – என்றார்.

உலக சுகாதார அமைப்பு மே 17 அன்று எபோலா வைரஸ் பரவலை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.

தற்போதைய தொற்றுப் பரவல் மே 15 அன்று முதன்முதலாக கண்டறியப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளோ தடுப்பூசிகளோ இல்லாத எபோலா நோயின் அரியவகை பண்டிபுக்யோ வைரஸால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

காங்கோ மற்றும் உகாண்டா பகுதிகளில் இதுவரை 20 வகையான எபோலா வைரஸ் பரவல் காணப்பட்ட நிலையில் பண்டிபுக்யோ வைரஸ் பரவல் 3 ஆவது முறையாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

காங்கோவின் பல நகரங்களில் மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று பரவலின் வேகம் மற்றும் எண்ணிக்கை மிகவும் கவலையளிக்கும் விதமாக இருப்பதாக உலக சுதாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக ஆலோசனை வழங்க ஐ.நா. சுகாதார அமைப்பு தனது அவசரகாலக் குழுவை கூட்டி முடிவெடுக்கவுள்ளது. 

Leave a Reply