காற்றாலை, பொலிஸாரின் அடாவடிக்கும் எதிராக மன்னார் ஸ்தம்பித்தது

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் மன்னாரில்  திங்கட்கிழமை (29) அன்று பொது முடக்கல்  போராட்டம் இடம்பெற்ற நிலையில், மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள்  வருகை தந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.