கிரீன்லாந்து மக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டம்

ஒவ்வொரு கிரீன்லாந்து குடிமகனுக்கும் 10,000 டொலர் முதல் 100,000 டொலர் வரை  வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கிரீன்லாந்தின் மக்கள் தொகை சுமார் 57,000 மட்டுமே. எனவே, இதற்கான மொத்த செலவு 6 பில்லியன் டொலர் வரை செல்லும் என மதிப்பிடப்படுகிறது.

கிரீன்லாந்து தற்போது டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக உள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்ததால் அமெரிக்கா அதனை முக்கியமாகக் கருதுகிறது.

அதேபோல், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு கிரீன்லாந்து அவசியம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.