லுஹன்ஸ்ட் பிராந்தியத்தின் ஸ்டாரோபில்ஸ்கிலுள்ள மாணவர்கள் தங்குமிடத்தின் மீதான உக்ரேனிய ட்ரோன் தாக்குதலொன்றுக்கு பதிலடியாகவே தாக்குதல்கள் இடம்பெறும் என ரஷ்ய பாதுகாப்பமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. அத்தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டு 42 பேர் காயமடைந்திருந்தனர்.
இதேவேளை இராணுவம், நிர்வாகக் கட்டமைப்பு வசதிகளை நெருங்குவதைத் தவிர்க்குமாறும் கிவ் பிரஜைகளை அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.