’’குடும்ப ஆரோக்கியத்திற்கான நடைபயணம் 2026’’

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல்,முறையான ஆரம்ப சுகாதார சேவையை வழங்குவதில் குடும்ப வைத்தியர்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துதல் ஆகிய முக்கிய நோக்கங்களாகும்.

இந்த நடைபயணமானது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில்   ஆரம்பித்து, விகாரமகாதேவி பூங்காவை   சென்றடையும் வகையில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு இடம்பெறவுள்ளது. இதில் சுகாதாரத் துறை வல்லுநர்கள், பயிற்சிக் காலத்திலுள்ள மருத்துவர்கள், குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடைபயணத்தின் ஒரு பகுதியாக, பங்குபற்றும் அனைவருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில், SLCSFP மருத்துவர்களினால் இலவச மருத்துவ முகாம் (Free Health Camp) ஒன்றும் நடத்தப்படவுள்ளது.

Leave a Reply