குளிரூட்டிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்களுக்குத் தடை

மதிப்பு கூட்டு வரி (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), விசேட பண்டங்கள் வரிச் சட்டத்தின் கீழ் இலக்கங்கள் 2482/09 மற்றும் 2487/02 ஆகிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இலக்கம் 2487/29 ஆகிய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறைகள் குறித்த விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் விளக்கமளிக்கையில், “எமது நாட்டில் உள்ள பெரும்பாலான குளிரூட்டிகள் மற்றும் காற்றூட்டிகளில் ஹைட்ரோ குளோரோ புளோரோ கார்பன் (HCFC) வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயு வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு நாம் வியானா உடன்படிக்கையின் மூலம் கட்டுப்பட்டுள்ளோம். எனவே, இந்த ஒழுங்குமுறைகளின் ஊடாக பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன:

2026 ஜூன் 6-ஆம் திகதி முதல்: HCFC வாயுவை வெளியிடும் குளிரூட்டிகள் மற்றும் காற்றூட்டிகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்படும்.

2028 ஜனவரி 1-ஆம் திகதி முதல்: HCFC வாயுவிற்காகப் பயன்படுத்தப்படும் கம்ப்ரசர்களை (Compressors) நாட்டிற்கு இறக்குமதி செய்வது முற்றாக நிறுத்தப்படும்.” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply