கொழும்பு – யாழ்ப்பாணம் பேருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கான பேருந்து சேவை யாழ்ப்பாணத்தில் இருந்து இரவு 7.00 மணியளவில் சேவையினைத் தொடங்கி சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், வெள்ளாங்குளம், மல்லாவி, மாங்குளம், வவுனியா ஊடாக கொழும்பை சென்றடையும். 

இதே வழித்தடத்தில் கொழும்பில் இருந்து இரவு 7.30 மணிக்கு யாழ்ப்பாணத்தினை நோக்கி இப்பேருந்து பயணிக்கும்.  

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி கிளையினால் இப்பேருந்து சேவை நடாத்தப்படுகின்றது. 

கொரோனா காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த இப்பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.