சந்திரசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகளுக்காக கொள்முதல் செய்யப்பட்ட ரூ.25 மில்லியன் மதிப்புள்ள விதை நெல்லை தனது அரசியல் கூட்டாளிகளுக்கு 2015 தேர்தலுக்கு சற்று முன்னதாக, விநியோகிக்க 2014 ஆம் ஆண்டு அனுராதபுரம் மாவட்ட செயலக அதிகாரிகளை சந்திரசேன வலியுறுத்தியதாக விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது.

இதனையடுத்தே முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசேன கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.