ஹல்துமுல்ல மாலதோல பின்னலந்த கிராமத்திற்கு மேலே அமைந்துள்ள மலைத்தொடரில் இருந்த பெரிய பாறை ஒன்று கீழே சரிந்து வந்தது. இதன் காரணமாக, இந்த மக்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வந்து ஆய்வு செய்யும் வரை தமது வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்