பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து ரூ. 100 மில்லியனுக்கும் அதிகமான இலஞ்சம் பெற்றதாக SSP சதீஸ் கமகே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விசாரணைகளில் இருந்து இந்த நிதி அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளிலும், அவரது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளின் கணக்குகளிலும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் இன்று (14) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.