இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. துருக்கி, இந்தோனீசியா, பிரான்ஸ், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் 6 முதல் 10 வரையிலான இடத்தை பிடித்துள்ளது.
போலந்து 11வது இடத்தையும், 4.42 புள்ளிகளுடன் இந்தியா 12வது இடத்தையும், அமெரிக்கா 13வது இடத்தையும், இலங்கை 69வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியாவின் சிறந்த உணவுகளாக ரொட்டி, நான் (naan), சட்னி, பிரியாணி, பருப்பு, பட்டர் கோழி, தந்தூரி கோழி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
உலகளவில் சிறந்த உணவுகளில், கொலம்பியாவின் Lechona என்ற பன்றி இறைச்சி உணவு முதலிடத்தையும், இத்தாலியின் Pizza Napoletana 2வது இடத்தையும் பிடித்துள்ளது.