”ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கத்தின் சொத்துக்கள்”

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் கவிழ்ந்துவிடாது என்றும், அதன் ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடியும் வரை ஆட்சியில் இருக்கும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தார். பதவிக்காலத்திற்குப் பிறகு, அரசாங்கம் மக்கள் முன் சென்று வாக்கெடுப்பு நடத்தக் கோரும் என்றும் அவர் கூறினார்.