ஜெர்மனி சோவியத் சோஷலிசப் புரட்சியின் 96 ம் ஆண்டு நிறைவு.

ரஷ்யப் புரட்சியை தொடர்ந்து, ஜெர்மனியில் 4 – 15 ஜனவரி 1919 இன்னொரு பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி பெற்றது. பெர்லின், ஹம்பூர்க், மியூனிச் ஆகிய நகரங்களில் ஆயுதமேந்திய தொழிலாளர்கள் சோவியத் குடியரசுகளை பிரகடனம் செய்தனர். இருப்பினும் அந்தப் புரட்சிகள் ஒரு மாதத்திற்குள் அடக்கப் பட்டன. வலதுசாரி இராணுவ அதிகாரிகளும், சமூக ஜனநாயக கட்சியில் இருந்த துரோகிகளும் எழுச்சியை அடக்குவதற்கு உதவினார்கள். அன்று நடந்த இனப்படுகொலையில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும், கம்யூனிஸ்டுகளும் கொல்லப் பட்டனர். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பேர்க் ஆகியோரும் படுகொலை செய்யப் பட்டவர்களில் அடங்குவார்கள்.