தொடங்கியது மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல்!

இதன்படி, குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் கடந்த கட்டத்தில் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறாத பெதுல் தொகுதி உட்பட 9 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்குவங்கம், அசாமில் தலா 4 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், கோவாவில் 2 தொகுதிகள், டையூ டாமனில், தாத்ரா நகர் ஹவேலி ஆகியவற்றிலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது. இதில், குஜராத் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும், காந்திநகர் தொகுதியில் அமித்ஷாவும் இன்று தங்களின் ஜனநாயக கடமையாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply