நாகதீப விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்

சட்டவிரோதமாக தனியார் காணி காணிகளில் அனுமதியின்றி இராணுவத்தினரால் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாராதிபதி அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடினார். 

இதன் ஒரு கட்டமாக தையிட்டிக்கு  நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாராதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பற்றை வளர்ந்திருந்த காணியை பார்வையிட்டு சென்றார்.