நீர்கொழும்பில் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (09) அதிகாலை வழக்கமான குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட வாகனச் சோதனையில் சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா, ஒரு கிராம் கொக்கைன் மற்றும் 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளில் சந்தேக நபர் தங்கியிருந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது, அங்கு அதிகாரிகள் கூடுதலாக 29 கிராம் குஷ் 24 கிராம் கஞ்சாவையும் 2.23 கிராம் அடையாளம் தெரியாத போதைப் பொருளையும் மீட்டனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் 2 கிலோ கேரளாக் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நெல்லியடி விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் செம்பியன் பற்று வடக்குப் பகுதியில் பயணித்த ஓட்டோ  ஒன்று விசேட அதிரடிப்படையால்  திடீர் சுற்றிவளைத்து மறிக்கப்பட்டது.

ஓட்டோவைச் சோதனை செய்தபோது அதிலிருந்து 2 கிலோ கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டது. ஓட்டோச் சாரதி கைது செய்யப்பட்டார்.  

கைது செய்யப்பட்ட நபர் செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த 19 வயது இளைஞன் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர் பிடிபட்ட கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.