தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பிற்குச் சொந்தமான லக்ஷபான நீர்மின் உற்பத்தி நிலையத் தொகுதியின் கீழ் உள்ள இந்நீர்த்தேக்கங்களில், கடந்த ஒரு வார காலப்பகுதியில் பெய்த மழையினால்:
மவுசாக்கலை நீர்த்தேக்கம்: 05 அடி
காசல்ரீ நீர்த்தேக்கம்: 15 அடி
என்ற அளவில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அந்தந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
போதுமான மழை வீழ்ச்சி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இன்று (15) காலை நிலவரப்படி மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், அவற்றின் வான்மட்டத்திலிருந்து முறையே 37 அடி மற்றும் 28 அடி வரை குறைந்திருந்ததாகப் பொறியியலாளர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
லக்ஷபான நீர்மின் உற்பத்தி நிலையத் தொகுதியின் கீழ் உள்ள லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டிய, பிராட்லண்ட்ஸ், கேனியன் மற்றும் விமலசுரேந்திர ஆகிய மின்நிலையங்களுக்குத் தேவையான நீர் பிரதானமாக மவுசாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
மவுசாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ள நிலையை இப்புகைப்படங்கள் காட்டுகின்றன.