தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக நீர்நிலைகளின் தன்மை மற்றும் ஆழம் மாற்றமடைந்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
உங்களுக்குத் தெரியாத நீர்நிலைகளில் இறங்கி நீராடவோ அல்லது அதனைப் பயன்படுத்தவோ முன்னதாக, அங்கிருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். சில வேளைகளில் பழைய இடங்களாக இருந்தாலும், அனர்த்தங்களுக்குப் பிறகு அவற்றின் ஆழம் அதிகரித்திருக்கக்கூடும் என்றார்.
இதேவேளை, பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய விபத்துக்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதால், அது தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறு வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க கேட்டுக்கொண்டார்.