பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிடைத்த புள்ளிவிபரவியல் தகவலின் அடிப்படையில், மக்கா குரங்குகள்5,197,517, குரங்குகள் 1,747,623, முள்ளம்பன்றிகள் 2,666,630 மற்றும் ராட்சத அணில்கள் 4,285,745 உள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவில் ஆறு கிராம அலுவலகர் பிரிவுகளில், மக்கா குரங்குகள், குரங்குகள், முள்ளம்பன்றிகள் மற்றும் ராட்சத அணில்கள் இல்லாததால், கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.