நேபாள சுற்றுலா வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சமீபத்திய அறிக்கையின்படி, பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போன வெளிநாட்டினரிடையே இலங்கையர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சமீபத்திய நிலவரப்படி, 65 அமெரிக்கர்கள், 53 உக்ரைனியர்கள், 51 மலேசியர்கள் மற்றும் 35 ஆஸ்திரேலியர்களும், 33 பிரித்தானிய மற்றும் 25 கனேடிய பிரஜைகளும் காணாமல் போயுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஒன்பது சிங்கப்பூர் பிரஜைகள், எட்டு ஜெமானிய பிரஜைகள் , எட்டு ரஷ்ய பிரஜைகள் , ஆறு லத்வேனிய பிரஜைகள் , ஆறு தென்னாப்பிரிக்க பிரஜைகள் , ஐந்து ஜப்பானிய பிரஜைகள் , ஐந்து நியூசிலாந்து பிரஜைகள் , நான்கு பிரெஞ்சுப் பிரஜைகள், மூன்று பெல்ஜிய பிரஜைகள் மற்றும் மூன்று ஸ்பானியர் பிரஜைகளும் காணாமல் போனோர் பட்டியலில் அடங்குவர்.