வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தத் தனிப்பட்ட சந்திப்பின் போது, மச்சாடோ தனது நோபல் பதக்கத்தை ட்ரம்ப்பிடம் ஒப்படைத்தார். இதனை “பரஸ்பர மரியாதையின் ஒரு சிறந்த அடையாளம்” என ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
வெனிசூலாவின் சுதந்திரத்திற்காக ட்ரம்ப் காட்டும் அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரமாக இப்பரிசு வழங்கப்படுவதாக மச்சாடோ குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ முடியாது என நோபல் குழு தெளிவுபடுத்தியுள்ளது.