பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

இதற்கான உத்தரவை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம்  வெள்ளிக்கிழமை (25) பிறப்பித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர்,  நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (25) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக  நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட 200 மில்லியன் ரூபாய்க்கு அதிக பெறுமதியான 21 மோட்டார் சைக்கிள்கள் அம்பலாந்தோட்டையில் வைத்து ஜூலை 12 ஆம் திகதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஹம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளர் கொழும்பு – நாரஹேன்பிட்டியவில் வைத்து ஜூலை 17 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.