புதிய இராணுவ கட்டளைத் தளபதிக்கு வரவேற்பு

காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பள்ளிவாயலின் தலைவருமான எம்.ஐ.எம். ஜவாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வில் கல்லடி இராணுவ முகாமின் கேர்ணல் எச்.பி.ஐ. குமார, குருக்கள் மடம்  இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி கேர்ணல் பலகல்ல, காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹாரூன் ரஸாதி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.சி.எம். சத்தார், செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் ஜமாலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 இராணுவ அதிகாரிகள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் மூவின மக்களுக்கும் சமத்துவமான மற்றும் சிறந்த சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், இன ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும் மேலும் வலுப்பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், அதற்காக துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.